X
ஜாம்பி

ஜாம்பி

Comedy | Thriller | 06 Sep 2019 |
Tamil

2.5 /5 Users

1.5 /5 Filmibeat

ஜாம்பி கதை

ஜாம்பி இயக்குனர் புவன் நுல்லன் இயக்கத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த், அன்புதாசன், கோபி, சுதாகர் நடித்துள்ள நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் வசந்த் மற்றும் முத்துக்குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.  கதை ஜாம்பி தாக்கப்பட்ட மனிதர்கள் சிலரிடம் மாட்டிக் கொள்ளும் சிலர் எப்படி அவர்களிடம் இருந்து தப்பிக்கிறார்கள் என்பது தான் ஜாம்பி படத்தின் கதைக்களம். சுதாகர், கோபி அரவிந்த், அன்புதாசன் இவர்கள் மூவரும் நண்பர்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் ஏதேதோ மன அழுத்தம். அதற்காக ஒரு பாரில் மது குடிக்க வருகிறார்கள். அப்போது அவர்களுக்கு டி.எம்.கார்த்தி மற்றும் பிஜிலி ரமேஷின் அறிமுகம் கிடைக்கிறது. பாரில் ஏற்படும் ரகளையைத் தொடர்ந்து ஐந்து பேரும் ஒரு காரில் ஒரு ரிசார்ட்டுக்கு செல்கிறார்கள். இதற்கிடையே அந்த ஏரியா டான் ஆன யோகி பாபுவின் போனை, பார் சண்டையில் நைசாக திருடி வருகிறார் பிஜிலி ரமேஷ். எனவே, போனைத் தேடி யோகி பாபுவும் அந்த ரிசார்ட்டுக்கு வருகிறார். அதே ரிசார்ட்டில் மருத்துவக் கல்லூரி மாணவியான யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது தோழிகள் ஆகியோரும் தங்கி இருக்கின்றனர். அந்த ரிசார்ட்டில் ஜாம்பி தாக்குதலுக்கு சிலர் ஆளாகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிப் பிழைக்க இப்போ மேலே சொல்லப்பட்டவர்கள் படம் முழுவதும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தப்பித்தார்களா..? இல்லை ஜாம்பியிடம் மாட்டிக் கொண்டார்களா என்பது தான் மீதிப்படம்.
Read More

ஜாம்பி நடிகர்கள் & படக்குழுவினர்

ஜாம்பி அணியின் தகவல்

இயக்குனர் புவன் நுல்லன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை பிரேம்ஜி அமரன்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஜாம்பி விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்கள் தான் ஜாம்பி என்றாலும், படத்தில் கதை என்றெல்லாம் குறிப்பிட்டு சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. ஏதோ ஒரு ஒன்லைன் ஸ்டோரியை மனதில் வைத்துக் கொண்டு, யோகி பாபுவையும், யாஷிகாவையும் மட்டும் நம்பி எல்லாக் காட்சிகளையும் படமாக்கி இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஜாம்பி ட்ரெய்லர்

Video Thumbnail

ஜாம்பி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஜாம்பி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+