»   »  என் நெஞ்சில் வாழும் கார்த்திக் - குஷ்பு நடிகர் கார்த்திக் எனக்கு சாதாரண நண்பர் மட்டுமில்லை, எனது நெஞ்சில் வாழும் நேசத்திற்குரியவர் என்று நடிகை குஷ்புஉருக்கமாக கூறியுள்ளார்.கார்த்திக் தொடங்கியிருக்கும் சரணாலயம் அமைப்பின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியின் போதுமுறைப்படி சரணாலயம் அமைப்பின் தலைவராக கார்த்திக் அறிவிக்கப்பட்டார். அமைப்பாளராக பொன்முருகன் தேர்வு செய்யப்பட்டார். இந்த அமைப்புக்கென தனிக் கொடியையும் உருவாக்கியுள்ளனர்.அறிமுக நிகழ்ச்சியில் நடிகை குஷ்புவும் கலந்து கொண்டார். அழைக்காமலேயே அவராகவே வந்ததாக கூட்டத்தில்தெரிவிக்கப்பட்டது. மேடை ஏறி மைக் பிடித்த குஷ்பு கார்த்திக்கை பாராட்டித் தள்ளி விட்டார்.நடிகர் கார்த்திக்கை எனது நண்பர் என்று சாதாரண வார்த்தைகளால் கூற முடியாது. அதற்கும் மேலானவர், என்அன்புக்குரியவர், என் நெஞ்சில் வாழும் நேசத்திற்குரியவர். எனக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் அவரிடம் சொல்ல வேண்டியதில்லை. அவராகவே ஓடி வந்து விடுவார். அந்தஅளவுக்கு எங்களுக்குள் நல்ல நட்பு, ஆழமான நட்பு நிலவி வருகிறது. என் உயிர் நண்பரான கார்த்திக் தொடங்கியுள்ள இந்த அமைப்பு வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று பேசினார் குஷ்பு.பின்னர் கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சாதி, மத ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்ற உன்னதநோக்கில் தான் இந்த சரணாலயம் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. அதனால் தான் இந்த அமைப்புக்கு சரணாலயம் என்றுபெயர் வைத்துள்ளோம்.ஏழை, எளியவர்கள், உடல் ஊனற்றவர்களுக்காக இந்த அமைப்பு பாடுபடும், உதவி செய்யும். கடவுள் நமக்கு கொடுத்துள்ளவாழ்க்கை அழகானது. ஆனால் அதை நாம் சரியாக வாழ்வதில்லை. ஏற்றத் தாழ்வுகளால் இது பாதிக்கப்படுகிறது,காயப்படுகிறது.அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் பல ஆயிரக்கணக்கானோர் இந்த உலகில் வாழ்கின்றனர்.அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டியுள்ளது. அதை சரணாலயம் பூர்த்தி செய்யும்.தமிழகத்தின் 80 சதவீத பகுதிகளில் சரணாலயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சேவைகளை தொடங்கி விட்டோம். இதுஒரு பார்மலான அறிமுக விழா தான். இந்த அமைப்பின் வளர்ச்சிக்காக கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் நிதி திரட்டவும்முடிவு செய்துள்ளேன் என்றார் கார்த்திக்.நிகழ்ச்சியில் கார்த்திக்கின் ரசிகர்கள் ஏராளமான பேர் திரண்டிருந்தனர்.

என் நெஞ்சில் வாழும் கார்த்திக் - குஷ்பு நடிகர் கார்த்திக் எனக்கு சாதாரண நண்பர் மட்டுமில்லை, எனது நெஞ்சில் வாழும் நேசத்திற்குரியவர் என்று நடிகை குஷ்புஉருக்கமாக கூறியுள்ளார்.கார்த்திக் தொடங்கியிருக்கும் சரணாலயம் அமைப்பின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியின் போதுமுறைப்படி சரணாலயம் அமைப்பின் தலைவராக கார்த்திக் அறிவிக்கப்பட்டார். அமைப்பாளராக பொன்முருகன் தேர்வு செய்யப்பட்டார். இந்த அமைப்புக்கென தனிக் கொடியையும் உருவாக்கியுள்ளனர்.அறிமுக நிகழ்ச்சியில் நடிகை குஷ்புவும் கலந்து கொண்டார். அழைக்காமலேயே அவராகவே வந்ததாக கூட்டத்தில்தெரிவிக்கப்பட்டது. மேடை ஏறி மைக் பிடித்த குஷ்பு கார்த்திக்கை பாராட்டித் தள்ளி விட்டார்.நடிகர் கார்த்திக்கை எனது நண்பர் என்று சாதாரண வார்த்தைகளால் கூற முடியாது. அதற்கும் மேலானவர், என்அன்புக்குரியவர், என் நெஞ்சில் வாழும் நேசத்திற்குரியவர். எனக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் அவரிடம் சொல்ல வேண்டியதில்லை. அவராகவே ஓடி வந்து விடுவார். அந்தஅளவுக்கு எங்களுக்குள் நல்ல நட்பு, ஆழமான நட்பு நிலவி வருகிறது. என் உயிர் நண்பரான கார்த்திக் தொடங்கியுள்ள இந்த அமைப்பு வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று பேசினார் குஷ்பு.பின்னர் கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சாதி, மத ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்ற உன்னதநோக்கில் தான் இந்த சரணாலயம் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. அதனால் தான் இந்த அமைப்புக்கு சரணாலயம் என்றுபெயர் வைத்துள்ளோம்.ஏழை, எளியவர்கள், உடல் ஊனற்றவர்களுக்காக இந்த அமைப்பு பாடுபடும், உதவி செய்யும். கடவுள் நமக்கு கொடுத்துள்ளவாழ்க்கை அழகானது. ஆனால் அதை நாம் சரியாக வாழ்வதில்லை. ஏற்றத் தாழ்வுகளால் இது பாதிக்கப்படுகிறது,காயப்படுகிறது.அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் பல ஆயிரக்கணக்கானோர் இந்த உலகில் வாழ்கின்றனர்.அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டியுள்ளது. அதை சரணாலயம் பூர்த்தி செய்யும்.தமிழகத்தின் 80 சதவீத பகுதிகளில் சரணாலயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சேவைகளை தொடங்கி விட்டோம். இதுஒரு பார்மலான அறிமுக விழா தான். இந்த அமைப்பின் வளர்ச்சிக்காக கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் நிதி திரட்டவும்முடிவு செய்துள்ளேன் என்றார் கார்த்திக்.நிகழ்ச்சியில் கார்த்திக்கின் ரசிகர்கள் ஏராளமான பேர் திரண்டிருந்தனர்.

Subscribe to Oneindia Tamil

நடிகர் கார்த்திக் எனக்கு சாதாரண நண்பர் மட்டுமில்லை, எனது நெஞ்சில் வாழும் நேசத்திற்குரியவர் என்று நடிகை குஷ்புஉருக்கமாக கூறியுள்ளார்.

கார்த்திக் தொடங்கியிருக்கும் சரணாலயம் அமைப்பின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியின் போதுமுறைப்படி சரணாலயம் அமைப்பின் தலைவராக கார்த்திக் அறிவிக்கப்பட்டார்.

அமைப்பாளராக பொன்முருகன் தேர்வு செய்யப்பட்டார். இந்த அமைப்புக்கென தனிக் கொடியையும் உருவாக்கியுள்ளனர்.

அறிமுக நிகழ்ச்சியில் நடிகை குஷ்புவும் கலந்து கொண்டார். அழைக்காமலேயே அவராகவே வந்ததாக கூட்டத்தில்தெரிவிக்கப்பட்டது. மேடை ஏறி மைக் பிடித்த குஷ்பு கார்த்திக்கை பாராட்டித் தள்ளி விட்டார்.

நடிகர் கார்த்திக்கை எனது நண்பர் என்று சாதாரண வார்த்தைகளால் கூற முடியாது. அதற்கும் மேலானவர், என்அன்புக்குரியவர், என் நெஞ்சில் வாழும் நேசத்திற்குரியவர்.

எனக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் அவரிடம் சொல்ல வேண்டியதில்லை. அவராகவே ஓடி வந்து விடுவார். அந்தஅளவுக்கு எங்களுக்குள் நல்ல நட்பு, ஆழமான நட்பு நிலவி வருகிறது.

என் உயிர் நண்பரான கார்த்திக் தொடங்கியுள்ள இந்த அமைப்பு வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று பேசினார் குஷ்பு.

பின்னர் கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சாதி, மத ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்ற உன்னதநோக்கில் தான் இந்த சரணாலயம் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. அதனால் தான் இந்த அமைப்புக்கு சரணாலயம் என்றுபெயர் வைத்துள்ளோம்.

ஏழை, எளியவர்கள், உடல் ஊனற்றவர்களுக்காக இந்த அமைப்பு பாடுபடும், உதவி செய்யும். கடவுள் நமக்கு கொடுத்துள்ளவாழ்க்கை அழகானது. ஆனால் அதை நாம் சரியாக வாழ்வதில்லை. ஏற்றத் தாழ்வுகளால் இது பாதிக்கப்படுகிறது,காயப்படுகிறது.

அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் பல ஆயிரக்கணக்கானோர் இந்த உலகில் வாழ்கின்றனர்.அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டியுள்ளது. அதை சரணாலயம் பூர்த்தி செய்யும்.

தமிழகத்தின் 80 சதவீத பகுதிகளில் சரணாலயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சேவைகளை தொடங்கி விட்டோம். இதுஒரு பார்மலான அறிமுக விழா தான். இந்த அமைப்பின் வளர்ச்சிக்காக கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் நிதி திரட்டவும்முடிவு செய்துள்ளேன் என்றார் கார்த்திக்.

நிகழ்ச்சியில் கார்த்திக்கின் ரசிகர்கள் ஏராளமான பேர் திரண்டிருந்தனர்.


Read more about: khushbu appreciates karthik

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil