»   »  பத்மப்ரியாவுக்கு புது சிக்கல்!

பத்மப்ரியாவுக்கு புது சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

டப்பிங் கலைஞர்கள் குறித்து கருத்து தெரிவிக்கப் போக புதுச் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார் பத்ம ப்ரியா.

தமிழில் இரண்டு படங்களோடு துரத்தப்பட் பத்ம ப்ரியா இப்போது தனது தாய் மொழியான மலையாளத்தில்பிசியாக நடித்து வருகிறார். கை நிறையப் படங்களுடன் திறமை காட்டி வரும் பத்மாவுக்கு இப்போது அங்குபுதுச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் டப்பிங் கலைஞர்கள் குறித்து சிலகருத்துக்களைக் கூறியிருந்தார் பத்மா. அது மலையாள டப்பிங் கலைஞர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

இதுகுறித்து மலையாள டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவர் பாக்கியலட்சுமி கூறுகையில், பத்ம ப்ரியாவுக்குமலையாளம் ச>யாகப் பேசக் கூடத் தெரியாது. அப்படிப்பட்டவர், டப்பிங் கலைஞர்கள் குறித்து எப்படி கருத்துகூறலாம்?

டப்பிங் கலைஞர்கள் இல்லாவிட்டால் அவர் மலையாளத்தில் புகழ் பெற்றிருக்க முடியுமா.? தனது பேச்சுக்குஅவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் நடப்பதே வேறு. அவரது படங்களுக்குடப்பிங் கலைஞர்கள் ஒத்துழைப்பு கொடுக்காமல் புறக்கணிப்போம் என்று ஆவேசமாக கூறினார்பாக்கியலட்சுமி.

தமிழ் புறக்கணித்து விட்ட நிலையில் மலையாள டப்பிங் கலைஞர்களின் கடுப்பை சம்பாதித்துள்ள பத்ம ப்ரியா,மன்னிப்பு கேட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்றே தெரிகிறது.

பத்ம ப்ரியா பேசாவிட்டாலும் பிரச்சினை, பேசினாலும் பிரச்சினையா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil