»   »  ஷகீலா ரசிகரான மோகன்லால்!

ஷகீலா ரசிகரான மோகன்லால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாள திரையுலகிலிருந்து, நெருக்கடி கொடுத்து விரடப்பட்ட ஷகீலா, சூப்பர்ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து ஒரு மலையாளப் படத்தில் நடித்துள்ளார்.

மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார்களை தனது மெகா செக்ஸி படங்களால்கலக்கி எடுத்தவர் ஷகீலா. சூப்பர் ஸ்டார் படங்களை திரையிட்ட தியேட்டர்கள்எல்லாம் காத்து வாங்க, ஷகீலாவின் படங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாகஅட்டகாசம் செய்து கொண்டிருந்தது ஒரு காலம்.

ஷகீலா படங்களால் தங்களது படங்களின் வசூல் குறைந்து, எங்கே தொடர்தோல்விகள் நிரந்தரமாகி விடுமோ என பயந்து போன மலையாள முன்னணிநடிகர்கள் அனைவரும் இணைந்து கேரள அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர்.ஷகீலாவுக்கு மிரட்டல்களும் வந்தன. அவரது படங்கள் திரையிட்ட தியேட்டர்களைசூப்பர் ஸ்டார் நடிகர்களின் ரசிகர்கள் சூறையாடினர்.

இதனால் கேரளாவிலிருந்து எஸ்கேப் ஆகி சென்னைக்கு இடம் பெயர்ந்தார் ஷகீலா.இப்போது சென்னையிலேயே தங்கி தமிழ், தெலுங்குப் படங்களில் தன்னாலானகலைச் சேவையை செய்து வருகிறார்.

இந்த நிலையில்தான் எதிர்பாராத ஒரு வாய்ப்பு மலையாளத்திலிருந்து ஷகீலாவைவந்து தட்டியது. மோகன்லால், பாவனா நடிக்கும் சோட்டா மும்பை படத்தில் நடிக்கும்வாய்ப்புதான் அது.

இதை உண்மையிலேயே ஷகீலா எதிர்பார்க்கவில்லை. அதை விட அவருக்குஆச்சரியமான ஒரு விஷயம், இப்படத்தில் மோகன்லால், ஷகீலா ரசிகராகநடிக்கிறாராம். ஷகீலா நடிகை ஷகீலாவாகவே இப்படத்தில் நடிக்கிறார்.

ஷகீலாவின் தீவிர ரசிகரான மோகன்லால், ஷகீலாவின் படப்பிடிப்பு நடப்பதைஅறிந்ததும் அங்கே செல்கிறார். அங்கு தனது ஆசை நாயகியைப் பார்த்துசந்தோஷமடைகிறார். இந்தக் காட்சியில் நடிக்கத்தான் ஷகீலாவை அழைத்தார்களாம்.அவரும் சந்தோஷமாக நடித்துக் கொடுத்துள்ளாராம்.

ஒரு வழியாக மோகன்லால் படத்தில் இடம் பெற்று விட்டோம். அடுத்து மம்முட்டி,ஜெயராம் என மற்ற நடிகர்களின் படங்களிலும் நடித்து விட்டால் மறுபடியும்மலையாளப் பக்கம் போவதில் பிரச்சினை இருக்காது என சந்தோஷமாகஇருக்கிறாராம் ஷகீலா.

அப்ப, அடுத்த ஆட்டத்துக்கு ரெடி?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil