»   »  சன்: ராதிகாவின் கோபம்! சின்னத் திரை தயாரிப்பாளர் சுஜாதா விஜயக்குமார் மீது கோபமாக உள்ளாராம் ராதிகா.எல்லாம் சீரியல் பஞ்சாயத்துத்தான்.சின்னத்திரை சீரியல் தயாரிப்பில் லீடிங்கில் இருப்பவர் ராதிகா. இவரது ரேடான் டிவிநிறுவன சீரியல்கள்தான் பெரும்பாலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்தன.ஆனால் இந்த நிலை படிப்படியாக மாறியது. எல்லாம் சரத்குமார்-திமுக மேதாலின்விளைவுதான். இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட ராதிகாதான்.இந் நிலையில், சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு சரத்குமார் அதிமுகவில் போய்ச்சேர்ந்தார். அவரது வலியுறுத்தலின் விளைவாக ராதிகாவும் கூடவே போய்ஜெயலலிதாவுடன் சேர்ந்து வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்டபுன்னகையுடன் போஸும் கொடுத்தார்.இருந்தாலும், அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்ய ராதிகா முன் வரவில்லை.இதையடுத்து ராதிகாவின் டிவி சீரியல்கள் தொடர்ந்து சன் டிவியை அலங்கரித்துக்கொண்டுள்ளன.கூடவே, ராதிகாவின் செல்வி சீரியலுக்கும் நீட்டிப்பு கொடுத்து ராதிகாவை தொடர்ந்துதங்களது பக்கமே தக்க வைத்துக் கொண்டுள்ளது சன் டிவி.இந் நிலையில் ராதிகாவைக் கடுப்படிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது.ஜெயா டிவியில் கேம்ஷோ நடத்தி வந்த மீனாவை சன் டிவி தன் பக்கம் இழுத்துள்ளது.மீனா முதல் முறையாக நடிக்கும் சீரியல் விரைவில் சன் டிவியில்ஒளிபரப்பாகவுள்ளது. லட்சுமி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சீரியலை இயக்குபவர்சுந்தர் கே.விஜயன். இங்கேதான் சிக்கல் ஆரம்பித்தது.சுந்தர் கே.விஜயன் தற்போது ராதிகாவின் செல்வி தொடரை இயக்கி வருகிறார்.ஆனால் திடீரென அதை பாதியில் விட்டு விட்டு லட்சுமிக்கு போய் விட்டார். இதனால்கடுப்பாகியுள்ளார் ராதிகா.நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் சீரியலை பாதியில் விட்டு விட்டுப் போவதுநயாயமல்ல என்று சுந்தர் கே.விஜயனிடம் ராதிகா புலம்பியுள்ளார். அதற்கு ஸாரிமேடம் இதில் என்னால் ஒன்றும் செய்ய முடியாது.லட்சுமி சீரியலை சிறப்பாக வழங்க வேண்டும், அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்என்று சானல்தான் என்னிடம் சொன்னது என்று கூறி விட்டாராம்.இதனால் ராதிகா என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டுள்ளாராம். இதில் இன்னொரு சுவாரஸ்யமான மேட்டரும் உள்ளது. லட்சுமிதொடரைத் தயாரிக்கப் போகும் சுஜாதா விஜயக்குமாரை தனது கடும் போட்டியாளராககருதுகிறார் ராதிகா.இவருடைய சீரியல்களுக்கும், ராதிகாவின் சீரியல்களுக்கும்தான் கடும் போர் நடந்துவருகிறது. இப்போது தனது இயக்குனரை சுஜாதா விஜயக்குமார் தனது பக்கம் இழுத்துவிட்டதால் சற்றே தொய்வடைந்துள்ளாராம் ராதிகா.உண்மையில் ராதிகாவுக்கு பலமுனைகளிலிருந்தும் நெருக்கடி கொடுத்து, நீங்கள்இல்லாவிட்டாலும் எங்களிடம் ஏகப்பட்ட பார்ட்டிகள் இருக்கிறார்கள் என்றுமறைமுகமாக மெசேஜ் கொடுத்திருக்கிறது சன் என்கிறார்கள்.இதனால் இருதலைக் கொள்ளி எறும்பு போல தவித்து வருகிறாராம் ராதிகா. போகப்போக இந்த சீரியல் போர் செம சூடு பிடிக்கும் என்று சின்னத் திரை வட்டாரம்எதிர்பார்க்கிறது.

சன்: ராதிகாவின் கோபம்! சின்னத் திரை தயாரிப்பாளர் சுஜாதா விஜயக்குமார் மீது கோபமாக உள்ளாராம் ராதிகா.எல்லாம் சீரியல் பஞ்சாயத்துத்தான்.சின்னத்திரை சீரியல் தயாரிப்பில் லீடிங்கில் இருப்பவர் ராதிகா. இவரது ரேடான் டிவிநிறுவன சீரியல்கள்தான் பெரும்பாலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்தன.ஆனால் இந்த நிலை படிப்படியாக மாறியது. எல்லாம் சரத்குமார்-திமுக மேதாலின்விளைவுதான். இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட ராதிகாதான்.இந் நிலையில், சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு சரத்குமார் அதிமுகவில் போய்ச்சேர்ந்தார். அவரது வலியுறுத்தலின் விளைவாக ராதிகாவும் கூடவே போய்ஜெயலலிதாவுடன் சேர்ந்து வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்டபுன்னகையுடன் போஸும் கொடுத்தார்.இருந்தாலும், அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்ய ராதிகா முன் வரவில்லை.இதையடுத்து ராதிகாவின் டிவி சீரியல்கள் தொடர்ந்து சன் டிவியை அலங்கரித்துக்கொண்டுள்ளன.கூடவே, ராதிகாவின் செல்வி சீரியலுக்கும் நீட்டிப்பு கொடுத்து ராதிகாவை தொடர்ந்துதங்களது பக்கமே தக்க வைத்துக் கொண்டுள்ளது சன் டிவி.இந் நிலையில் ராதிகாவைக் கடுப்படிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது.ஜெயா டிவியில் கேம்ஷோ நடத்தி வந்த மீனாவை சன் டிவி தன் பக்கம் இழுத்துள்ளது.மீனா முதல் முறையாக நடிக்கும் சீரியல் விரைவில் சன் டிவியில்ஒளிபரப்பாகவுள்ளது. லட்சுமி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சீரியலை இயக்குபவர்சுந்தர் கே.விஜயன். இங்கேதான் சிக்கல் ஆரம்பித்தது.சுந்தர் கே.விஜயன் தற்போது ராதிகாவின் செல்வி தொடரை இயக்கி வருகிறார்.ஆனால் திடீரென அதை பாதியில் விட்டு விட்டு லட்சுமிக்கு போய் விட்டார். இதனால்கடுப்பாகியுள்ளார் ராதிகா.நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் சீரியலை பாதியில் விட்டு விட்டுப் போவதுநயாயமல்ல என்று சுந்தர் கே.விஜயனிடம் ராதிகா புலம்பியுள்ளார். அதற்கு ஸாரிமேடம் இதில் என்னால் ஒன்றும் செய்ய முடியாது.லட்சுமி சீரியலை சிறப்பாக வழங்க வேண்டும், அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்என்று சானல்தான் என்னிடம் சொன்னது என்று கூறி விட்டாராம்.இதனால் ராதிகா என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டுள்ளாராம். இதில் இன்னொரு சுவாரஸ்யமான மேட்டரும் உள்ளது. லட்சுமிதொடரைத் தயாரிக்கப் போகும் சுஜாதா விஜயக்குமாரை தனது கடும் போட்டியாளராககருதுகிறார் ராதிகா.இவருடைய சீரியல்களுக்கும், ராதிகாவின் சீரியல்களுக்கும்தான் கடும் போர் நடந்துவருகிறது. இப்போது தனது இயக்குனரை சுஜாதா விஜயக்குமார் தனது பக்கம் இழுத்துவிட்டதால் சற்றே தொய்வடைந்துள்ளாராம் ராதிகா.உண்மையில் ராதிகாவுக்கு பலமுனைகளிலிருந்தும் நெருக்கடி கொடுத்து, நீங்கள்இல்லாவிட்டாலும் எங்களிடம் ஏகப்பட்ட பார்ட்டிகள் இருக்கிறார்கள் என்றுமறைமுகமாக மெசேஜ் கொடுத்திருக்கிறது சன் என்கிறார்கள்.இதனால் இருதலைக் கொள்ளி எறும்பு போல தவித்து வருகிறாராம் ராதிகா. போகப்போக இந்த சீரியல் போர் செம சூடு பிடிக்கும் என்று சின்னத் திரை வட்டாரம்எதிர்பார்க்கிறது.

Posted By:
Subscribe to Oneindia Tamil
சின்னத் திரை தயாரிப்பாளர் சுஜாதா விஜயக்குமார் மீது கோபமாக உள்ளாராம் ராதிகா.எல்லாம் சீரியல் பஞ்சாயத்துத்தான்.

சின்னத்திரை சீரியல் தயாரிப்பில் லீடிங்கில் இருப்பவர் ராதிகா. இவரது ரேடான் டிவிநிறுவன சீரியல்கள்தான் பெரும்பாலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்தன.

ஆனால் இந்த நிலை படிப்படியாக மாறியது. எல்லாம் சரத்குமார்-திமுக மேதாலின்விளைவுதான். இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட ராதிகாதான்.

இந் நிலையில், சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு சரத்குமார் அதிமுகவில் போய்ச்சேர்ந்தார். அவரது வலியுறுத்தலின் விளைவாக ராதிகாவும் கூடவே போய்ஜெயலலிதாவுடன் சேர்ந்து வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்டபுன்னகையுடன் போஸும் கொடுத்தார்.

இருந்தாலும், அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்ய ராதிகா முன் வரவில்லை.இதையடுத்து ராதிகாவின் டிவி சீரியல்கள் தொடர்ந்து சன் டிவியை அலங்கரித்துக்கொண்டுள்ளன.

கூடவே, ராதிகாவின் செல்வி சீரியலுக்கும் நீட்டிப்பு கொடுத்து ராதிகாவை தொடர்ந்துதங்களது பக்கமே தக்க வைத்துக் கொண்டுள்ளது சன் டிவி.

இந் நிலையில் ராதிகாவைக் கடுப்படிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது.ஜெயா டிவியில் கேம்ஷோ நடத்தி வந்த மீனாவை சன் டிவி தன் பக்கம் இழுத்துள்ளது.

மீனா முதல் முறையாக நடிக்கும் சீரியல் விரைவில் சன் டிவியில்ஒளிபரப்பாகவுள்ளது. லட்சுமி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சீரியலை இயக்குபவர்சுந்தர் கே.விஜயன். இங்கேதான் சிக்கல் ஆரம்பித்தது.

சுந்தர் கே.விஜயன் தற்போது ராதிகாவின் செல்வி தொடரை இயக்கி வருகிறார்.ஆனால் திடீரென அதை பாதியில் விட்டு விட்டு லட்சுமிக்கு போய் விட்டார். இதனால்கடுப்பாகியுள்ளார் ராதிகா.

நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் சீரியலை பாதியில் விட்டு விட்டுப் போவதுநயாயமல்ல என்று சுந்தர் கே.விஜயனிடம் ராதிகா புலம்பியுள்ளார். அதற்கு ஸாரிமேடம் இதில் என்னால் ஒன்றும் செய்ய முடியாது.

லட்சுமி சீரியலை சிறப்பாக வழங்க வேண்டும், அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்என்று சானல்தான் என்னிடம் சொன்னது என்று கூறி விட்டாராம்.

இதனால் ராதிகா என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டுள்ளாராம். இதில் இன்னொரு சுவாரஸ்யமான மேட்டரும் உள்ளது. லட்சுமிதொடரைத் தயாரிக்கப் போகும் சுஜாதா விஜயக்குமாரை தனது கடும் போட்டியாளராககருதுகிறார் ராதிகா.

இவருடைய சீரியல்களுக்கும், ராதிகாவின் சீரியல்களுக்கும்தான் கடும் போர் நடந்துவருகிறது. இப்போது தனது இயக்குனரை சுஜாதா விஜயக்குமார் தனது பக்கம் இழுத்துவிட்டதால் சற்றே தொய்வடைந்துள்ளாராம் ராதிகா.

உண்மையில் ராதிகாவுக்கு பலமுனைகளிலிருந்தும் நெருக்கடி கொடுத்து, நீங்கள்இல்லாவிட்டாலும் எங்களிடம் ஏகப்பட்ட பார்ட்டிகள் இருக்கிறார்கள் என்றுமறைமுகமாக மெசேஜ் கொடுத்திருக்கிறது சன் என்கிறார்கள்.

இதனால் இருதலைக் கொள்ளி எறும்பு போல தவித்து வருகிறாராம் ராதிகா. போகப்போக இந்த சீரியல் போர் செம சூடு பிடிக்கும் என்று சின்னத் திரை வட்டாரம்எதிர்பார்க்கிறது.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil