»   »  மார்ச் 20ல் சிவாஜி பாடல்?

மார்ச் 20ல் சிவாஜி பாடல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள சிவாஜி படத்தின் பாடல் கேசட் வருகிற 20ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

சிவாஜி படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. கடைசிக் கட்ட நகாசு வேலைகளில் ஷங்கர் படு தீவிரமாக உள்ளார். படம் அற்புதமாக வந்துள்ளதாகசிவாஜி படத் தரப்பு சந்தோஷமாக கூறி வருகிறது. பாடல்களும் தூளாக வந்துள்ளதாம்.

பாடல் கேசட் எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அனேகமாக வருகிற 20ம் தேதி பாடல் கேசட் வெளியீட்டு விழாஇருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்தத் தகவலை ஏவிஎம் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.

தற்போது படத்தின் டிரைலர் காட்சிகளை இறுதி செய்வதில் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம். இந்த வாரத்துக்குள் டிரைலர் ரெடியாகிதியேட்டர்களை கலக்க ஆரம்பித்து விடும் என்று கூறுகிறார்கள்.

முதலில் சிவாஜி படம் வெளியிடப்படவுள்ள தியேட்டர்களில் மட்டும் டிரைலரை ரிலீஸ் செய்யவுள்ளனராம். அதன் பிறகு தொலைக்காட்சிநிறுவனங்கள், இணைய தளங்களுக்கு வழங்கவுள்ளனராம்.

சிவாஜி படம் குறித்த மேலும் சில தகவல்களைக் கறக்கலாம் என்று தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மற்றும் அவரது மகன் எம்.எஸ்.குகனைஅணுகியபோது சரவணன் வாய் திறக்க மறுத்து விட்டார்.

ஆனால் குகன் சில விஷயங்களைக் கொட்டினார். மார்ச் கடைசி வாரத்தில் ஆடியோ ரிலீஸ் இருக்கும். அதற்கு முன்னதாக டிரைலர் வெளியிடப்படும்என்றார் குகன். ஆனால் ஷங்கர் தரப்பிலிருந்து இதுகுறித்து சத்தமே இல்லை.

இதற்கிடையே, சென்னை நகரில் சிவாஜியை திரையிட 16 தியேட்டர்கள் போட்டியில் உள்ளனவாம். இவற்றில் அபிராமி, உதயம், பிருந்தா,ஆல்பட், மாயாஜால், ஐனாக்ஸ், சத்யம், பாரத், ரோகினி ஆகிய தியேட்டர்களுக்கு சிவாஜி கொடுக்கப்படுவது உறுதியாகி விட்டதாம்.

இவை தவிர புறநகர்ப் பகுதிகளில் உள்ள கிட்டத்தட்ட 40 தியேட்டர்களும் சிவாஜியை திரையிட முட்டி மோதிக் கொண்டுள்ளதாம்.

பட ரிலீஸுக்கு முன்பாக சத்யம் மற்றும் ஐனாக்ஸ் திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil