twitter
    X
    Home சினி தரவரிசை

    ரசிகர்கர்களின் மனம் கவர்ந்த ஸ்ரேயா கோஷல் பாடல்கள்

    Author Sakthi Harinath | Updated: Tuesday, November 22, 2022, 12:19 PM [IST]

    ஸ்ரேயா கோஷல் இந்திய திரைப்பட பின்னணி பாடகர் ஆவார். இவர் தேசிய விருது, கேரளா மற்றும் தமிழ் நாடு அரசு விருதுகள் என பல விருதுகளை வென்று இந்திய அளவில் புகழ் பெற்றவர் ஆவார். இந்திய திரைத்துறையில் சினிமாவிற்காக பல விருதுகளை வென்றுள்ள இவர், பெங்காலி குடும்பத்தை சேர்ந்தவர். இந்த தொகுப்பில் ஸ்ரேயா கோஷல் பாடிய தமிழ் பாடல்களில் சிறப்பு தொகுப்பாக இங்கு சில பாடல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

    cover image

    ஆல்பம் - செல்லமே செல்லமே

    ஆல்பம் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஆர்யன் ராஜேஷ், ஸ்ருதிக முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ராஜம் பாலசந்தர் தயாரிக்க, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

    விருமாண்டி - உன்னைவிட

    விருமாண்டி நடிகர், இயக்குனர் என பல திறமை கொண்ட கமல் ஹாசன் அவர்கள் தானே இயக்கி, தயாரித்து நடித்துள்ள அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தில் இவருடன், பசுபதி, நெப்போலியன், அபிராமி, நாசர் மற்றும் பல நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

    அந்நியன் - அண்டங்காக்கை கொண்டக்காரி

    அந்நியன், 2005-ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், விக்ரம், சதா, விவேக், பிரகாஷ் ராஜ் மற்றும் பலரும் நடித்த நகைச்சுவை, காதல் மற்றும் அதிரடி த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் வி. ரவிச்சந்திரன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.அதிரடி மற்றும் திரில்லர் கதைக்களத்தில்...

    தாஸ் - சாமி கிட்ட சொல்லி புட்டேன்

    தாஸ் 2005-ம் ஆண்டு வெளிவந்த காதல் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தினை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். இப்படத்தில், ஜெயம் ரவி, ரேணுகா மேனன், வடிவேலு மற்றும் பலர் நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    சில்லுனு ஒரு காதல் - முன்பே வா

    சில்லுனு ஒரு காதல் 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் நாள், என் கிருஷ்ணா இயக்கத்தில், சூர்யா, ஜோதிகா, பூமிகா, வடிவேலு, சந்தனம், ஷ்ரியா ஷர்மா மற்றும் பலர் நடித்திருக்கும் காதல் மற்றும் குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை கே இ ஞானவேல்ராஜா தயாரித்ததுள்ளார். இத்திரைப்படத்திற்கு வாலி பாடல் வரிகளை எழுத ஏ ஆர் ரஹ்மான்...

    வெயில் - உருகுதே மருகுதே

    வெயில் 2006-ம் ஆண்டு வெளிவந்த காதல் மற்றும் அதிரடி குடும்பத் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் வசந்தபாலன் இயக்கியுள்ளார். இப்படத்தில் பரத், பசுபதி, ரவி மரியா, பாவனா, ஸ்ரேயா ரெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜி வி பிரகாஷ் குமார்.

    குருவி - தேன் தேன் தேன்

    குருவி 2008-ம் ஆண்டு வெளிவந்த காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்கினர் தரணி இயக்க, விஜய் , த்ரிஷா, விவேக் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்

    விண்ணைத்தாண்டி வருவாயா - மன்னிப்பாயா

    விண்ணைத்தாண்டி வருவாயா 2010ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம். இத்திரைப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன். சிலம்பரசன்,த்ரிஷா மற்றும் கணேஷ் ஜனார்தனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2009ம் ஆண்டின் முற்பகுதியில் துவக்கப்பட்ட இத்திரைப்படம் பிப்ரவரி 26, 2010 ல் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.விண்ணைத்தாண்டி வருவாயா...

    அங்காடித் தெரு - உன் பேரை சொல்லும்போது

    அங்காடித் தெரு, இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். கருணாமூர்த்தி மற்றும் அருண்பாண்டியன் ஆகியோரின் தயாரித்த இந்தப் படத்தை அய்ங்கரன் இன்டர்னேசனல் நிறுவனம் வெளியிட்டது. மகேசு, அஞ்சலி, இயக்குநர் வெங்கடேசு மற்றும் கனாக்காணும் காலங்கள் பாண்டி ஆகியோர் முக்கிய...

    வெற்றிவேல் - உன்னைப்போல ஒருத்தனான

    வெற்றிவேல் தமிழ் அதிரடி மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் வசந்தமணி இயக்க, சசிகுமார், பிரபு மற்றும் தம்பி ராமையா போன்றோர் நடித்துள்ளார். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

    மெர்சல் - நீதானே

    மெர்சல் இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன் மற்றும் பலர் நடிக்கும் காதல், நகைச்சுவை, அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தினை தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்க, படத்தின் திரைக்கதையை பாகுபலி புகழ் விஜயேந்திர பிரசாத்...

    சீமராஜா - உண்ணவிட்ட யாரும் எனக்கில்லை

    சிவகார்த்திகேயன் பொன்ராம் கூட்டணியில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத படம் குற்றாலத்தில் நடக்கின்றது. இப்படத்தில் சிவகார்த்தியனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இவருடன் சூரியும் இணைந்துள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சிம்ரன் நடிக்கிறார். அதுவும் சிவகார்த்திகேயனுக்கு வில்லியாக.கதை :சிங்கம்பட்டி சமஸ்தானத்தின்...

    நம்ம வீட்டுப் பிள்ளை - மைலாஞ்சி

    நம்ம வீட்டுப் பிள்ளை இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தனது சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளர்.குடும்பம் மற்றும் காதல் கதையாக...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X