X
சீமராஜா

சீமராஜா

Action | 13 Sep 2018 |
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

சீமராஜா கதை

சிவகார்த்திகேயன் பொன்ராம் கூட்டணியில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத படம் குற்றாலத்தில் நடக்கின்றது. இப்படத்தில் சிவகார்த்தியனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இவருடன் சூரியும் இணைந்துள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சிம்ரன் நடிக்கிறார். அதுவும் சிவகார்த்திகேயனுக்கு வில்லியாக. கதை : சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் ராஜா நெப்போலியனின் ஒரே ஆண் வாரிசு சீமராஜா (சிவகார்த்திகேயன்). கணக்குப்பிள்ளை அரவிந்த்சாமியுடன் (சூரி) சேர்ந்து ஊதாரியாக ஊர் சுற்றி திரிகிறார். புளியம்பட்டி வில்லன் குடும்பமான காத்தாடி கண்ணன் (லால்) காளிஸ்வரி தம்பதிக்கும் (சிம்ரன்), சிங்கம்பட்டி ஜமீன் குடும்பத்துக்கும் இடையே பல ஆண்டு காலப்பகை. இதனால் ஊருக்கு பொதுவான சந்தை யாராலும் பயன்படுத்த முடியாமல் பூட்டிக்கிடக்கிறது. உள்ளூர் பள்ளியில் பி.டி. ஆசிரியையாக பணிபுரியும் புளியம்பட்டி சுதந்திர செல்வி (சமந்தா) மீது சீமராஜாவுக்கு காதல் மலர்கிறது. அவரது காதலை பெற ஊர் சந்தையை திறந்து வம்பில் சிக்குகிறார் சீமராஜா. வில்லன் கும்பலிடம் இருந்து சந்தையை சீமராஜா மீட்டாரா? காதலியை கரம் பிடித்தாரா என்பது தான் படம்.
Read More

சீமராஜா நடிகர்கள் & படக்குழுவினர்

சீமராஜா அணியின் தகவல்

இயக்குனர் பொன்ராம்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சீமராஜா விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
சீமராஜாவாக அசத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன். உள்ளூரில் ஊதாரித்தனமாக சுற்றித்திரிவது, சார்ட் வண்டியில் வந்து சைட் அடிப்பது, சமந்தாவை காதலிப்பது, சூரியுடன் சேர்ந்து காமெடி செய்வது என தனது வழக்கமான துறுதுறு நடிப்பால் கவர்கிறார். ஆனால் அதே லுக்குடன் காஸ்ட்டியூமை மட்டும் மாற்றி கடம்பவேல் ராஜாவாக வலம் வர நினைத்திருப்பது ஒர்க்கவுட் ஆகவில்லை. சாதாரண எண்டர்டெயினர் படம் என்பதை தாண்டி மாஸ் ஹீரோ எண்டர்டெயினர் படமாக சீமராஜாவை கொடுக்க முயற்சித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ஓபனிங் பைட், ஓபனிங் சாங், பன்ச் டயலாக்ஸ் என மாஸ் ஹீரோ படத்துக்கு தேவையான அனைத்தும் இடம்பெற்றிருக்கிறது. சிவகார்த்திகேயன் எண்ட்ரியைவிட மாஸான எண்ட்ரி காளிஸ்வரி சிம்ரனுக்கு. 'பொம்பளையா இவ' என நம் தாய்மார்களே திட்டும் அளவுக்கு செம பெர்பாமன்ஸ். ஆனால் சவுண்ட் பார்ட்டியாக எண்ட்ரியாகி, பின்னர் சைலண்ட் மோடுக்கு தாவி விடுகிறார். ராணி வேடத்தில் கேமியோ செய்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்த கெட்டப்பில் பார்க்கும் போது சாவித்திரி ஞாபகம் தான் வருகிறது. கம்பீர ராஜா நெப்போலியன், அடாவடி வில்லன் லால், தொட்டி தாத்தா என படத்தில் வரும் அனைவருமே நிறைவான நடிப்பை தந்திருக்கிறார்கள். அனைவரது காஸ்டியூம்சும் ரசிக்க வைக்கிறது. ஒரு மாஸ் கமர்சியல் படத்துக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் நேர்மையாக செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம். அந்த போர் காட்சிகள் ஸ்பார்டன்ஸ் படத்தை நினைவூட்டுகிறது. அந்தளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகளும் உயிர்ப்புடன் இருக்கின்றன. கலை, ஸ்டன்ட் என மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் கடுமையான உழைப்பும் ஸ்கிரீனில் தெரிகிறது.

சீமராஜா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

சீமராஜா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+