சிவகார்த்திகேயன் பொன்ராம் கூட்டணியில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத படம் குற்றாலத்தில் நடக்கின்றது. இப்படத்தில் சிவகார்த்தியனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இவருடன் சூரியும் இணைந்துள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சிம்ரன் நடிக்கிறார். அதுவும் சிவகார்த்திகேயனுக்கு வில்லியாக.
கதை :
சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் ராஜா நெப்போலியனின் ஒரே ஆண் வாரிசு சீமராஜா (சிவகார்த்திகேயன்). கணக்குப்பிள்ளை அரவிந்த்சாமியுடன் (சூரி) சேர்ந்து ஊதாரியாக ஊர் சுற்றி திரிகிறார். புளியம்பட்டி வில்லன் குடும்பமான காத்தாடி கண்ணன் (லால்) காளிஸ்வரி தம்பதிக்கும் (சிம்ரன்), சிங்கம்பட்டி ஜமீன் குடும்பத்துக்கும் இடையே பல ஆண்டு காலப்பகை. இதனால் ஊருக்கு பொதுவான சந்தை யாராலும் பயன்படுத்த முடியாமல் பூட்டிக்கிடக்கிறது. உள்ளூர் பள்ளியில் பி.டி. ஆசிரியையாக பணிபுரியும் புளியம்பட்டி சுதந்திர செல்வி (சமந்தா) மீது சீமராஜாவுக்கு காதல் மலர்கிறது. அவரது காதலை பெற ஊர் சந்தையை திறந்து வம்பில் சிக்குகிறார் சீமராஜா. வில்லன் கும்பலிடம் இருந்து சந்தையை சீமராஜா மீட்டாரா? காதலியை கரம் பிடித்தாரா என்பது தான் படம்.