»   »  சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' படத்திலும் ஒரு ஸ்பெஷல் இருக்காம்.. என்ன அது?

சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' படத்திலும் ஒரு ஸ்பெஷல் இருக்காம்.. என்ன அது?

Posted By:
Subscribe to Oneindia Tamil
சீமராஜா ஸ்பெஷல் என்ன?!

சென்னை : இசையமைப்பாளர் டி.இமானின் மெலடி பாடல் வரிசைகளுக்காகவே அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு.

கிட்டத்தட்ட தான் இசையமைக்கும் எல்லாப் படங்களிலும் ஒரு பாடலையாவது மெலடியாக இசையமைத்து செம ஹிட்டாக்கி விடுவார்.

இவர் இசையமைத்திருக்கும் 'சீமராஜா' படத்திலும் அப்படியொரு பாடல் இருக்கிறதாம். இதுபற்றி ட்விட்டரில் ட்வீட் செய்திருக்கிறார் டி.இமான்.

டி.இமான்

டி.இமான்

100 படங்களுக்கு இசையமைத்துள்ள டி.இமான், தமிழில் மிக பிஸியான இசையமைப்பாளராக வலம் வருகிறார். கடந்த வருடம் மட்டும் இவர் இசையில் 10 படங்கள் ரிலீஸாகியுள்ளன. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சீமராஜா' படத்திலும் இமான் தான் இசையமைப்பாளர்.

விசுவாசம்

விசுவாசம்

தற்போது சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடிக்கும் 'விசுவாசம்' படத்திற்கு இசையமைக்கிறார். இதுதான் அவர் இசையமைக்கும் முதல் அஜித் படம். இதனைத் தொடர்ந்து, கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் நடிக்கும் படத்திற்கும் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார் டி.இமான்.

சிவகார்த்திகேயன் - பொன்ராம்

சிவகார்த்திகேயன் - பொன்ராம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களில் கதை தாண்டி பாடல்களையும் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பர். அப்படித்தான் சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியில் வந்த இரண்டு படங்களில் இடம்பெற்ற மெலடி பாடல்கள் ஹிட் அடித்தன.

ஸ்ரேயா கோஷல்

ஸ்ரேயா கோஷல்

அதுவும் ஸ்ரேயா கோஷல் குரலில் ஒரு மெலடி பாடல் என்றால் சொல்லவே தேவையில்லை அது செம ஹிட் அடிக்கும். தற்போது 'சீமராஜா' படத்திலும் ஒரு மெலடி பாடல் இடம்பெற்றுள்ளதாம். அந்தப் பாடலையும் ஸ்ரேயா கோஷல் தான் பாடியுள்ளாராம்.

மெலடி பாடல்

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் பாக்காதே பாக்காதே... பாடல், 'ரஜினிமுருகன்' படத்தில் உன் மேல ஒரு கண்ணு.. பாடல் போலவே, 'சீமராஜா' படத்திலும் செமையான மெலடி பாடல் ஒன்று இருக்கிறது எனும் தகவலை டி.இமான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

English summary
Sivakarthikeyan - Ponram - D.Imman combo has hit the melody songs of the previous two films. At present, Imman has composed the song for 'Seemaraja'. Shreya ghosal sings a melody song for D.Imman.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil