24 தமிழ் குடும்ப மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை விக்ரம் குமார் இயக்க, சூர்யா, சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கதை :
24 ஒரு அறிவியல் தொழிநுட்பம் மற்றும் காதல், நகைச்சுவை என அனைத்தும் கலந்த கலைவையான ஒரு திரைப்படம். இத்திரைப்படம் மூன்று முக்கிய கதாப்பாத்திரங்களை மையமாக கொண்டு நகர்கின்றது.
சேதுராமன் காலங்களை முன்னோக்கியும், பின்னோக்கியும் நகர்த்தி பயணம் செய்யும் டைம் மிசினை கண்டறிந்த ஒரு விஞ்ஞானி. இவர் தனது மனைவி நித்யா மேனன் மற்றும் குழந்தை ஆகியோர் வில்லன் ஆத்ரேயாவின் பிடியில், சிக்கி தவிக்க, காலங்கள் 26 வருடம் உருண்டோகிறது.
விஞ்ஞானி சேதுராமனின் மகன் மணியிடம் (மற்றொரு சூர்யா) தற்போது அந்த காலத்தை கணிக்கும், பயணிக்கும் கடிகாரம் கிடைக்க, அதனால், பல்வேறு இடையூர்கள், கதையில் எதிர்பாராத திருப்புமுனைகள் என கதை பரப்பரப்பாக நகர்கிறது.
மணியிடம் எவ்வாறு அந்த கடிகாரம் கிடைக்கிறது, சேதுராமன் குடும்பத்தில் சேதுராமனின் மகன் மணி மட்டும் தப்பியது எப்படி? ஆத்ரேயா யார்? என பல சுவாரியமான சஸ்பென்ஸ்கள் கதையில் ஒளிந்துள்ளது.
மொத்தத்தில் 24 படத்தை பார்க்கும் நாமும் காலங்கள் கடந்து பயணிக்கும் ஒரு அனுபவத்தை கொடுக்கின்றது.