X
24

24

Action | Drama | 06 May 2016 |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

24 கதை

24 தமிழ் குடும்ப மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை விக்ரம் குமார் இயக்க, சூர்யா, சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கதை :  24 ஒரு அறிவியல் தொழிநுட்பம் மற்றும் காதல், நகைச்சுவை என அனைத்தும் கலந்த கலைவையான ஒரு திரைப்படம். இத்திரைப்படம் மூன்று முக்கிய கதாப்பாத்திரங்களை மையமாக கொண்டு நகர்கின்றது.  சேதுராமன் காலங்களை முன்னோக்கியும், பின்னோக்கியும் நகர்த்தி பயணம் செய்யும் டைம் மிசினை கண்டறிந்த ஒரு விஞ்ஞானி. இவர் தனது மனைவி நித்யா மேனன் மற்றும் குழந்தை ஆகியோர் வில்லன் ஆத்ரேயாவின் பிடியில், சிக்கி தவிக்க, காலங்கள் 26 வருடம் உருண்டோகிறது.  விஞ்ஞானி சேதுராமனின் மகன் மணியிடம் (மற்றொரு சூர்யா) தற்போது அந்த காலத்தை கணிக்கும், பயணிக்கும் கடிகாரம் கிடைக்க, அதனால், பல்வேறு இடையூர்கள், கதையில் எதிர்பாராத திருப்புமுனைகள் என கதை பரப்பரப்பாக நகர்கிறது.  மணியிடம் எவ்வாறு அந்த கடிகாரம் கிடைக்கிறது, சேதுராமன் குடும்பத்தில் சேதுராமனின் மகன் மணி மட்டும் தப்பியது எப்படி? ஆத்ரேயா யார்? என பல சுவாரியமான சஸ்பென்ஸ்கள் கதையில் ஒளிந்துள்ளது.  மொத்தத்தில் 24 படத்தை பார்க்கும் நாமும் காலங்கள் கடந்து பயணிக்கும் ஒரு அனுபவத்தை கொடுக்கின்றது. 
Read More

24 நடிகர்கள் & படக்குழுவினர்

24 அணியின் தகவல்

இயக்குனர் விக்ரம் குமார்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஏ ஆர் ரஹ்மான்
தயாரிப்பாளர் சூர்யா சிவகுமார்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் 102.00 Cr
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

24 விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
டைம் மெஷின்... சினிமா உலகில் எவர்கிரீன் களமிது. ஹாலிவுட்டில் அடிக்கடி இந்தக் களத்தில் படங்கள் வரும். தமிழில் அரிதாக எப்போதாக ஒன்றிரண்டு. வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்ட ஈடுபாடு இருந்தால் மட்டும்தான் '24' மாதிரி கதைகளைப் படங்களாக்க முடியும். அந்த வகையில் ஹீரோ சூர்யாவைவிட தயாரிப்பாளர் சூர்யா பாராட்டுக்குரியவர். படத்தின் விமர்சனத்துக்குப் போகும் முன்... குழந்தைகளுக்கான சேனல்களில் டோரிமான் என்று ஒரு தொடர் கார்ட்டூன் சீரியல் ஒளிபரப்பாவதைப் பார்த்திருக்கிறீர்களா... அதை நினைவூட்டிக் கொண்டால் இந்தக் கதையோடு எளிதில் உங்களால் ஒன்ற முடியும்! நேரத்தை உறைய வைத்து மழையை அந்தரத்தில் நிறுத்துவது, கிரிக்கெட் ஸ்டேடியத்துக்குள் புகுந்து மேட்ச் முடிவை மாற்றுவது, காதலியைக் குழப்புவது... என சுவாரஸ்யக் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை. படத்தின் ஒவ்வொரு பகுதியிலும் சூர்யாவின் அபார உழைப்பு. அதுவும் அந்த வில்லன் சூர்யா.. இதுவரை வந்த சூர்யா பாத்திரங்களிலேயே அல்டிமேட். வில்லத்தனத்தின் கொடூரத்தை அப்படிக் காட்டியிருக்கிறார். ஆனால் ஏன் இத்தனை விரோதம்? விஞ்ஞானி சூர்யா அந்த கடைசி காட்சியில் துப்பாக்கியின் இலக்கைத் திருப்பி வைப்பதில் ஸ்கோர் செய்கிறார். அம்மாவாக வரும் சரண்யா, இளம் சூர்யா தான் யாரென்பதை கண்டு கொள்ளும் காட்சியில் அழ வைக்கிறார். ஆனால் இந்த கோடையில் குழந்தைகளோடு தைரியமாகப் பார்க்கப் போகலாம் என்பது ஒரு ஆறுதல்.

24 திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

24

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+