twitter

    அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு கதை

    அச்சம் மடம் நாணம் மடம் பயிர்ப்பு இயக்குனர் ராஜா ராமமூர்த்தி இயக்கத்தில் அக்ஷரா ஹாசன் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தில் அக்ஷராவுடன் உஷா உதுப், அஞ்சனா ஜெயபிரகாஷ், சுரேஷ் சந்திரா, மால்குடி சுபா என பலர் நடித்துள்ளனர்.

    இத்திரைப்படம் 2022 மார்ச் 25ல் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    அச்சம் மடம் நாணம் மடம் பயிர்ப்பு திரைப்படத்தின் கதை

    கதைக்கரு

    அச்சம் மடம் நாணம் மடம் பயிர்ப்பு என்ற நான்கு குணங்களையும் வைத்து ஒரு பெண்ணை பார்க்கக்கூடாது என்பதே இப்படத்தின் கதைக்கரு.

    கதை

    காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை ஒரு சலிப்பான வாழ்க்கையை வாழ்கிறார், அக்ஷரா ஹாசன். பாட்டி உஷா உதூப் சங்கீதம் கற்றுத்தருகிறார். அப்பா சுரேஷ் மேனன் மொத்தமே 3 சீன் வருகிறார், அதில் 2 சீன் மகளுடன் உணவருந்துகிறார், ஒருதடவை டிவி பார்க்கிறார். மகள் அக்‌ஷராவுக்கும் குடும்பத்துக்கும் ஒட்டவே இல்லை வெகு தூரம் என்பதுபோல் காட்டுகிறார்கள்.

    அக்‌ஷரா என்ன செய்கிறார் படிக்கிறாரா? வேலைக்கு போகிறாரா? எதுவும் தெரியவில்லை. இடையில் அவ்வப்போது நாயைக்கூப்பிட்டு வாக்கிங் போகிறார். பாய்ஃபிரண்ட் கிரிக்கெட்டரை லவ் பண்ணுகிறார். அக்‌ஷராவுடன் பேச நேரமில்லாமல் நெட்பிராக்டீஸ் செய்துக்கொண்டே காதலிக்கிறார் காதலன்.

    இரண்டு தோழிகளின் அறிவுரையை கேட்டு தனது காதலனுடன் டேட்டிங் செல்ல ஆசை படுகிறார், பின் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

    **Note:Hey! Would you like to share the story of the movie அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு with us? Please send it to us ([email protected]).