ஆக்ஷன் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால், தமன்னா, ராம்கி நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆர் ரவீந்திரன் தயாரிக்க, ஹிப் ஹாப் தமிழா இசைக்குழு இப்படத்திற்கு இசையமைத்துள்ளது.
ஆக்ஷன் திரைப்படத்தின் பிரத்தியேக தகவல்கள்
சுந்தர் சி இயக்கத்தில் பல திரையுலக முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கும் அதிரடி திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் டுட்லே ஒளிப்பதிவில் படத்தொகுப்பாளர் என் பி ஸ்ரீகாந்த் எடிட்டிங் செய்துள்ளார்.
இத்திரைப்படம் இயக்குனர் சுந்தர் சி-யின் கமெர்சியல் படமாக இல்லாமல் முழுக்க முழுக்க சண்டை காட்சிகளை கொண்டு அதிரடி படமாக உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு முன்னதாகவே விஷால், ஹிப்ஹாப் ஆதி, சுந்தர் சி கூட்டணியில் குடும்பம் மற்றும் அதிரடி படமாக உருவாகி 2015-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகியது 'ஆம்பள' திரைப்படம். இத்திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்திருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.
ஆக்ஷன் திரைப்படத்தின் கணிக்கப்படும் கதை
ராணுவ அதிகாரியாக பணியாற்றும் விஷால் சிறந்த அதிகாரியாக விருது பெற்று ராணுவத்தில் பிரபலமாகிறார். ராணுவத்தில் இருக்கக்கூடிய சில விஷமிகளால் தன் குடும்பத்தில் சிலரை இழக்கிறார் விஷால். பின்னர் அதற்காக பழிதீர்க்கும் படலமே ஆக்ஷன் திரைப்படம்.
முழுக்கதை விரைவில்.....
ரிலீஸ்
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று படக்குழுவினரால் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பின்னர் இத்திரைப்படத்தின் ட்ரைலர் நவம்பர் மாதம் படக்குழுவினரால் வெளியானது.