அடங்க மறு கதை

  அடங்க மறு இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில், ஜெயம் ரவி, ராசி கண்ணா, ராமதாஸ், சம்பத் ராஜ் மற்றும் பலர் நடித்த அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

  ஒரு போலீஸ் அதிகாரி நேர்மையாக செயல்பட்டதற்காக பழிவாங்கப்படுகிறான். தனது இழப்புக்கு காரணமான வில்லன்களை அந்த போலீகாரன் எப்படி திருப்பி அடிக்கிறான் என்பதே ஜெயம் ரவியின் 'அடங்கமறு'.

  கதை

  நேர்மையான காவல் உதவி ஆய்வாளரான ஜெயம் ரவிக்கு ஐ.பி.எஸ். அதிகாரியாக வேண்டும் என்பது கனவு. அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அண்ணன் குழந்தைகள் , காதலி (ராஷி கண்ணா), நண்பர்கள் என சந்தோஷமான குடும்பம் ஜெயம் ரவியினுடையது. நேர்மையாக செயல்படும் அவரின் வாழ்க்கையில் திருப்பமாக ஒரு வழக்கு அமைகிறது. 

  பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பெரிய இடத்து பசங்களை ஜெயம் ரவி கைது செய்கிறார். அந்த பசங்களுடைய அப்பாக்கள் பெரும் புள்ளிகள் என்பதால், சில நிமிடங்களில் வெளியே வந்துவிடுகிறார்கள். தங்களை கைது செய்ததற்காக ஜெயம் ரவியின் குடும்பத்தை அழிக்கிறார்கள்.

  ஆனால் குற்றவாளிகளான 4 இளைஞர்களையும் காப்பாற்ற உயர் அதிகாரியான சம்பத் முயற்சிக்கிறார். சம்பத்தின் சூழ்ச்சியால் ஜெயம் ரவியால் குற்றவாளிகளுக்கு எதிரான தடையங்களை சேகரிக்க முடியவில்லை . அதனால் அவர் வேலையை இழக்கிறார். 

  அந்த பசங்களை அவர்களின் அப்பாக்களின் கைகளினால் கொலை செய்ய வைப்பேன் என சவால்விடுகிறார். எந்த அதிகாரமும் இல்லாமல் தனது தனி முயற்சியால் எப்படி ஜெயம் ரவி வில்லன்களை பழிவாங்குகிறார் என்பதே மீதிக் கதை.  **Note:Hey! Would you like to share the story of the movie அடங்க மறு with us? Please send it to us (popcorn@oneindia.co.in).