X
அடங்க மறு

அடங்க மறு

Action | 21 Dec 2018 | U/A |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

அடங்க மறு கதை

அடங்க மறு இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில், ஜெயம் ரவி, ராசி கண்ணா, ராமதாஸ், சம்பத் ராஜ் மற்றும் பலர் நடித்த அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். ஒரு போலீஸ் அதிகாரி நேர்மையாக செயல்பட்டதற்காக பழிவாங்கப்படுகிறான். தனது இழப்புக்கு காரணமான வில்லன்களை அந்த போலீகாரன் எப்படி திருப்பி அடிக்கிறான் என்பதே ஜெயம் ரவியின் 'அடங்கமறு'. கதை நேர்மையான காவல் உதவி ஆய்வாளரான ஜெயம் ரவிக்கு ஐ.பி.எஸ். அதிகாரியாக வேண்டும் என்பது கனவு. அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அண்ணன் குழந்தைகள் , காதலி (ராஷி கண்ணா), நண்பர்கள் என சந்தோஷமான குடும்பம் ஜெயம் ரவியினுடையது. நேர்மையாக செயல்படும் அவரின் வாழ்க்கையில் திருப்பமாக ஒரு வழக்கு அமைகிறது.  பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பெரிய இடத்து பசங்களை ஜெயம் ரவி கைது செய்கிறார். அந்த பசங்களுடைய அப்பாக்கள் பெரும் புள்ளிகள் என்பதால், சில நிமிடங்களில் வெளியே வந்துவிடுகிறார்கள். தங்களை கைது செய்ததற்காக ஜெயம் ரவியின் குடும்பத்தை அழிக்கிறார்கள். ஆனால் குற்றவாளிகளான 4 இளைஞர்களையும் காப்பாற்ற உயர் அதிகாரியான சம்பத் முயற்சிக்கிறார். சம்பத்தின் சூழ்ச்சியால் ஜெயம் ரவியால் குற்றவாளிகளுக்கு எதிரான தடையங்களை சேகரிக்க முடியவில்லை . அதனால் அவர் வேலையை இழக்கிறார்.  அந்த பசங்களை அவர்களின் அப்பாக்களின் கைகளினால் கொலை செய்ய வைப்பேன் என சவால்விடுகிறார். எந்த அதிகாரமும் இல்லாமல் தனது தனி முயற்சியால் எப்படி ஜெயம் ரவி வில்லன்களை பழிவாங்குகிறார் என்பதே மீதிக் கதை.
Read More

அடங்க மறு நடிகர்கள் & படக்குழுவினர்

அடங்க மறு அணியின் தகவல்

இயக்குனர் கார்த்திக் தங்கவேல்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சாம் சி எஸ்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

அடங்க மறு விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
செம பிட் போலீஸாக ஜெயம் ரவி கலக்குகிறார். டெக்னாலஜியை கொண்டு எதிரகளை கதறவிடுவது, திமிறி எழுந்து சாவல்விட்டு திருப்பி அடிப்பது, காதலியுடன் கில்மா செய்வது, குடும்பத்துடன் பாசம் காட்டுவது என தனிஒருவனாக படத்தை சுமக்கிறார். எத்தனை போலீஸ் படத்தில் நடித்தாலும், வித்தியாசம் காட்டும் உடல் மொழியை எளிதாக கையாள்கிறார். மிக யதார்த்தமான, அதேநேரத்தில் பவர்வுல்லான ஆக்ஷன் காட்சிகளை அமைத்த ஸ்டன் சிவாவுக்கு தனி பாராட்டுகள். ஜெயம் ரவிக்கு ஏற்ப நம்பகதன்மையுடன் ஸ்டன்ட் காட்சிகளை அமைத்திருக்கிறார். ஏற்கனவே வந்த பல நூறு போலீஸ் படங்களின் பட்டியலில் அடங்கிவடுகிறது இந்த 'அடங்க மறு'.

அடங்க மறு திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

அடங்க மறு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+