ஆந்திரா மெஸ் கதை

  ஆந்திரா மெஸ் இயக்குனர் ஜெய் இயக்கத்தில், ராஜ் பாரத், தேஜஸ்வினி, பூஜா தேவரியா, வினோத், மதிவண்ணன் ராஜேந்திரன், பாலாஜி மோகன் மற்றும் பலரும் நடித்த நகைச்சுவை திரைப்படம். இப்படத்திற்கு பிரஷாந்த் பிள்ளை இசையமைத்துள்ளார். 

  கதை :

  வரது(ஏ.பி.ஸ்ரீதர்), ரத்னா(ராஜ்பரத்), , ரிச்சி(மதி), சேது (பாலாஜி) ஆகிய நான்கு பேரும் திருடர்கள். ரவுடி தேவராஜிடம் (வினோத்) வேலை செய்கிறார்கள். நடுதர வயது வரது தேவராஜிடம் பெற்ற கடனுக்காக, கட்டாயத்தின் பேரிலேயே அவரிடம் வேலை செய்து வருகிறார். பணம் தடையாக இருப்பதால், அவரது காதல் முறிகிறது. இதனால் வரது வேதனையில் தவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், முக்கியமான அசைன்மென்ட் ஒன்றை அவரிடம், தருகிறார் பாஸ் தேவராஜ்.


  ரத்னா, ரிச்சி, சேது, என சகக்கூட்டாளிகளுடன் வரது அந்த அசைமென்ட்டை மேற்கொள்ளும் போது, அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் அடிக்கிறுது. இதையடுத்து, நாள்வரும் இரத்தினகிரிக்கு தப்பி செல்கிறார்கள். அங்கு வாழும் முன்னாள் ஜமிந்தாரின் (அமரேந்திரன்)வீட்டில் அடைக்கலமாகிறார்கள். ஜமிந்தாரின் மனைவி பாலா (தேஜஸ்வனி) மீது ரத்னாவுக்கு (ராஜ்பரத்) ஈர்ப்பு ஏற்படுகிறுது. பாலாவுக்கும் ஈர்ப்பு ஏற்பட, இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தும் தருணத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள். 

  அந்தவேளையில், அரசி (பூஜா தேவரியா) என்ட்ரியாகிறார். ஒருபக்கம் வில்லனும் இவர்களை தேடி இரத்தினகிரி வருகிறார். ராஜ்பரத் - தேஜஸ்வனி காதல் என்ன ஆகிறது? வில்லன் தேவராஜிடம் இருந்து இவர்கள் தப்பித்து எவ்வளவு நாட்கள் ஒன்றாக இருக்கிறார்கள் என்பது 'காமெடி' கலக்காத மீதிக்கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie ஆந்திரா மெஸ் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).