X
தமிழ் » திரைப்படங்கள் » ஆந்திரா மெஸ்
ஆந்திரா மெஸ்

ஆந்திரா மெஸ்

Comedy | 22 Jun 2018 | U/A |
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

ஆந்திரா மெஸ் கதை

ஆந்திரா மெஸ் இயக்குனர் ஜெய் இயக்கத்தில், ராஜ் பாரத், தேஜஸ்வினி, பூஜா தேவரியா, வினோத், மதிவண்ணன் ராஜேந்திரன், பாலாஜி மோகன் மற்றும் பலரும் நடித்த நகைச்சுவை திரைப்படம். இப்படத்திற்கு பிரஷாந்த் பிள்ளை இசையமைத்துள்ளார்.  கதை : வரது(ஏ.பி.ஸ்ரீதர்), ரத்னா(ராஜ்பரத்), , ரிச்சி(மதி), சேது (பாலாஜி) ஆகிய நான்கு பேரும் திருடர்கள். ரவுடி தேவராஜிடம் (வினோத்) வேலை செய்கிறார்கள். நடுதர வயது வரது தேவராஜிடம் பெற்ற கடனுக்காக, கட்டாயத்தின் பேரிலேயே அவரிடம் வேலை செய்து வருகிறார். பணம் தடையாக இருப்பதால், அவரது காதல் முறிகிறது. இதனால் வரது வேதனையில் தவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், முக்கியமான அசைன்மென்ட் ஒன்றை அவரிடம், தருகிறார் பாஸ் தேவராஜ். ரத்னா, ரிச்சி, சேது, என சகக்கூட்டாளிகளுடன் வரது அந்த அசைமென்ட்டை மேற்கொள்ளும் போது, அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் அடிக்கிறுது. இதையடுத்து, நாள்வரும் இரத்தினகிரிக்கு தப்பி செல்கிறார்கள். அங்கு வாழும் முன்னாள் ஜமிந்தாரின் (அமரேந்திரன்)வீட்டில் அடைக்கலமாகிறார்கள். ஜமிந்தாரின் மனைவி பாலா (தேஜஸ்வனி) மீது ரத்னாவுக்கு (ராஜ்பரத்) ஈர்ப்பு ஏற்படுகிறுது. பாலாவுக்கும் ஈர்ப்பு ஏற்பட, இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தும் தருணத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்.  அந்தவேளையில், அரசி (பூஜா தேவரியா) என்ட்ரியாகிறார். ஒருபக்கம் வில்லனும் இவர்களை தேடி இரத்தினகிரி வருகிறார். ராஜ்பரத் - தேஜஸ்வனி காதல் என்ன ஆகிறது? வில்லன் தேவராஜிடம் இருந்து இவர்கள் தப்பித்து எவ்வளவு நாட்கள் ஒன்றாக இருக்கிறார்கள் என்பது 'காமெடி' கலக்காத மீதிக்கதை.
Read More

ஆந்திரா மெஸ் நடிகர்கள் & படக்குழுவினர்

ஆந்திரா மெஸ் அணியின் தகவல்

இயக்குனர் ஜெய்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஆந்திரா மெஸ் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
பாளக் ஹூமர் பாணியில் தத்துவார்த்மாக கதை சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெய். பிளாக் ஹூமர் என்பது படத்தின் அறிவிப்பு பலகையில் மட்டுமே இருக்கிறது. ஒரு சில இடங்களில் மட்டுமே சிரிப்பு வருகிறது. படம் பார்க்க நிறைய பொறுமை தேவைபடுகிறுது. எல்லா காட்சிகளுமே மிக மெதுவாக நகர்கிறது. 'இது காமம் இல்ல காதல்' என ரத்னாவிடம் பாலா சொல்லும் இந்த வசனத்தின் மூலம் செக்ஸ் தான் காதல் என்பதை அழுத்தமாக சொல்கிறார் இயக்குனர் ஜெய். சில வசனங்கள் தத்துவார்த்தமாக இருக்கிறுது.அதே வேளையில் டபுள் மீனிங் டயலாக்குகளும் அதிகம். காதல் முறிவால் வரது எடுக்கும் முடிவு, அவர்களை கொள்ளைக்காரர்களாக ஓடவிடுகிறுது. ஆனால் காதல் கைக்கூடியதால் ரத்னா எடுக்கும் முடிவு, அவர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துகிறது. அதெல்லாம் சரி படத்துக்கு எதற்கு ஆந்திரா மெஸ் என பெயர் வைத்தார் இயக்குனர் என்பது தான் கடைசி வரை புரியவில்லை. மொத்தத்தில் ஆதிக்கவாதியாகவே இருந்தாலும் ஆண்கள் எப்போதுமே வீக்கர் செக்ஸ் தான் என்கிறது படம். இன்னும் கொஞ்சம் காரம், உப்பு, புளிப்பு எல்லாம் சேர்த்திருந்தால், ஆந்திராவுக்கே சென்று புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி கிடைத்திருக்கும்.

ஆந்திரா மெஸ் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஆந்திரா மெஸ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+