அனேகன் இந்திய திரையுலகில், இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கி வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படமாகும். ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும், ஹாரிஸ் ஜெயராஜின் இசையிலும், நடிகர் தனுஷ், அமைரா தாஸ்தூர், கார்த்திக், அதுல் குல்கர்னி மற்றும் பலரது நடிப்பில் உருவாகிறது. மேலும் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும், ஆன்டனி படத் தொகுப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.
கதை :
இக்கதை முழுக்க முழுக்க காதல் கதையாகும். தனுஷ் மற்றும் அமிரா பல்வேறு கோணங்களிலும், பல்வேறு கலகட்டங்களிளும் காதலிக்கின்றனர். ஒரே படத்தில் நான்கு வெவ்வேறு விதமான காதல் கதையை எடுத்து கூறுவது போல் அமைந்துள்ளது. மூன்று கதைகளில் தோல்வியுறும் காதல் இறுதிக் காதலிலாவது வெற்றிப் பெற்றதா இல்லையா என்பதே மீதிக்கதை.