அண்ணாத்த கதை

  அண்ணாத்த (தலைவர் 168) இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பூ, மீனா, பிரகாஷ்ராஜ் என தமிழ் திரைப்பட முன்னணி நடிகை, நடிகர்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் குடும்பம் மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தனது சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார்.

  தமிழ் ரசிகர்கள் அனைவரும் குடும்பங்களோடு ரசிக்கும் நோக்கத்தோடு அதிரடி மற்றும் குடும்பக்கதையாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வெற்றி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரூபன் எடிட்டிங் செய்துள்ளார்.
  அண்ணாத்த திரைப்படத்தின் கதை

  கதைக்கரு: தனது தங்கை கீர்த்தி சுரேஷ் மீது அதிக பாசம் கொண்டுள்ள ரஜினி ஒரு கட்டத்தில் தங்கையின் தவறான முடிவிற்காக இருவரும் பிரிகின்றனர். பின் தங்கைக்கு தெரியாமல் தங்கையின் எதிரிகளை எதிர்த்து அவருக்கு உதவுவதே இப்படத்தின் கதைக்கரு.

  கதை 

  காளையன் (ரஜினி) தஞ்சாவூரில், சூரக்கோட்டை கிராமத் தலைவராக உள்ளார். இவர் யாருக்கும் அஞ்சாமல் அநியாயத்தை தட்டிக்கேட்கும் குணம் கொண்டவர் இதனாலே மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குடன் வாழ்கிறார். காளையன் தன் தங்கை மீனாட்சி (கீர்த்தி சுரேஷ்) மீது அதீத பாசம் கொண்டிருக்கிறார்.

  கொல்கத்தாவில் படிக்கும் தங்கை கீர்த்தி சுரேஷ் விடுமுறையில் ஊருக்கு வரும்போது திருவிழா போல் கொண்டாடுகிறார், ரஜினி. தனது தங்கையின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த நினைக்கும் ரஜினி, தங்கைக்கு ஒரு நல்ல வரனை அமைக்கிறார்.

  கீர்த்தி சுரேஷ் ஒருவரை காதலித்து காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி, வேறொருவரை திருமணம் செய்துகொண்டு கொல்கத்தாவுக்குச் சென்று விடுகிறார். ஆனால் கீர்த்தி சுரேஷ் கொல்கத்தாவில் பல கஷ்டங்களுக்கு இடையில் வாழ்கிறார். 

  இதனை அறிந்த ரஜினி கொல்கத்தாவிற்கு சென்று தன் தங்கைக்கு தெரியாமலே அவரின் நிழலாக நின்று காப்பாற்றுகிறார். அப்படி என்ன கஷ்டத்தை கீர்த்தி சந்தித்தார்? யார் அந்த வில்லன்கள் என்பதே படத்தின் கதை.

  அண்ணாத்த திரைப்படத்தின் ரிலீஸ் மற்றும் அறிவிப்புகள்

  ரஜினி மற்றும் இயக்குனர் சிவா கூட்டணியில் உருவாகும் "அண்ணாத்த" திரைப்படம் படக்குழுவினரால் உறுதி செய்யப்பட்டு இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பினை 2019 அக்டோபர் 11ல் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இவரின் இணையதள ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தின் கூட்டணி பற்றிய தகவல்களை வெளியிட்டு உறுதி செய்துள்ளார். 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் சன் பிக்சார்ஸ் மற்றும் நடிகர் ரஜினி-யின் கூட்டணியில் "பேட்ட" திரைப்படமும், இயக்குனர் சிவா இயக்கத்தில் "விஸ்வாசம்" திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி வசூல் சாதனை படைத்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

  இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய "தர்பார்" படத்தின் ரிலீஸிற்கு முன்னரே இப்படத்தினை உறுதி செய்து படத்தின் பற்றிய அறிவிப்பினை "தலைவர் 168" என படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையே நடிகர் சூர்யா நடிப்பில் தலைப்பு உறுதி செய்யப்படாத  "சூர்யா 39" திரைப்படம் ஒன்றில் இயக்குனர் சிவா இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். பின்னர் சிவா மற்றும் ரஜினி கூட்டணி பற்றிய தகவல்கள் வெளியாகி திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பில் பிரபலமானது.

  அண்ணாத்த திரைப்படத்தின் பிரத்தியேக தகவல்கள்

  நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைவாழ்வில் இப்படம் 168-வது திரைப்படமாகும். இப்படம் அண்ணாத்த என்ற தலைப்பு அறிவிப்பதற்கு முன்னர் "தலைவர் 168" என்று தாற்காலிய பெயரில் இப்படம் ரசிகர்கள் அழைக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரஜினி - சன் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவான "பேட்ட" திரைப்படம் தமிழகத்தில் மாபெரும் வெற்றியை கண்டு பிரபலமானது. இந்த கூட்டணி மீண்டும் இப்படத்தில் மூலம் இணைந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.

  "லேடி சூப்பர் ஸ்டார்" என்ற பட்டப்பெயரில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நயன்தாரா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் குஷ்பூ, மீனா, பிரகாஷ்ராஜ் என தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.1990 முதல் 2000 காலகட்டங்களில் ரஜினியின் படங்களில் நாயகி கதாபாத்திரங்களில் நடித்த குஷ்பூ மற்றும் மீனா இப்படத்தில் நடிக்கவிருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது. பல ஆண்டுகளுக்கு பின்னர் இவர்கள் கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது.

  அண்ணாத்த திரைப்படம் 2020 தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்த நிலையில் கொரோனா நோய் பரவல் காரணங்களால் தமிழ் மற்றும் இந்திய திரையரங்குகள் தாற்காலியமாக அடைக்கப்பட்டது. இதனால் இத்திரைப்படம் 2021 தீபாவளி பண்டிகைக்கு உலகம் முழுவுதும் வெளியாகியுள்ளது.
  **Note:Hey! Would you like to share the story of the movie அண்ணாத்த with us? Please send it to us (popcorn@oneindia.co.in).