அனபெல் சேதுபதி கதை

  அனபெல் சேதுபதி இயக்குனர் தீபக் சுந்தராஜன் இயக்கத்தில்  விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா சரத்குமார், யோகி பாபு என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் நகைச்சுவை - திகில் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் தயாரிக்க, இசையமைப்பாளர் கிருஷ்ணா கிஷோர் இசையமைத்துள்ளார்.

  நகைச்சுவை கலாட்டாவில் குடும்பங்களோடு கண்டு ரசிக்கும் வண்ணத்தில் ஒரு திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் எடிட்டிங் செய்துள்ளார்.

  நகைச்சுவை கலாட்டாவில் உருவான அனபெல் சேதுபதி திரைப்படம், நேரடியாக ஆன்லைன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடியில் 2021 செப்டம்பர் 17ல் வெளியாகியுள்ளது. இப்படம் ஆன்லைன் தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று 2021 ஆம் ஆண்டின் வெற்றி படங்களின் தரவரிசையில் இடம் பிடித்துள்ளது.  அனபெல் சேதுபதி திரைப்படத்தின் கதை

  கதைக்கரு: ஒரு அரண்மையில் பல பேய்கள் மாட்டியுள்ளன. அவைகளால் அந்த அரண்மனையை விட்டு வெளியேற முடியாது. அந்த அரண்மனைக்குள் தன் குடும்பத்தோடு வருகை தரும் டாப்சி எவ்வாறு அந்த பேய்களுக்கு உதவினார் என்பதே படத்தின் கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie அனபெல் சேதுபதி with us? Please send it to us (popcorn@oneindia.co.in).