ஆன்டனி கதை

  ஆன்டனி தமிழ் இசை மற்றும் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் குட்டி குமார்  இயக்க, லால், நிஷாந்த், ரேகா மற்றும் பலர் நடித்துள்ளனர். 

  கதை:

  கதாநாயகன் ஆண்டனி (நிஷாந்த்), கொடைக்கானல் நகரின் ஸ்டிரிக்டான போலீஸ் எஸ்.ஐ. அவரது தந்தை ஜார்ஜும் (லால்) முன்னாள் போலீஸ் அதிகாரி. தாய் மேரி (ரேகா) விபத்தில் கால்களை இழந்த மாற்றுத்திறனாளி. ஆண்டனியின் காதலி மகா (வைஷாலி) லேடிஸ் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பெண் இளம். ஜார்ஜின் போலீஸ் நண்பர் சம்பத்ராம்.

  படம் துவங்கியதுமே ஹீரோ ஆண்டனி ஒரு காருக்குள் இருந்து மயக்கம் தெளிகிறார். தான் எங்கே இருக்கிறோம் என தெரியாமல் குழம்பும் ஹீரோவுக்கு, சிறிது நேரம் கழித்துதான் காருடன் மண்ணுக்குள் புதைந்து கிடப்பது புரிகிறது. பதற்றமடையும் ஹீரோ தன்னை யார் இங்கு அடைத்து வைத்திக்கிறார் என புரியாமல், வெளியேற முயல்கிறார். ஆனால் அவரால் முடியவில்லை.

  இதற்கிடையே, ஹீரோயின் மகா, காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக, சார் பதிவாளர் அலுவலகம் முன் காத்திருக்கிறார். வெகு நேரம் ஆகியும் ஆண்டனி வராததால், அவரது தந்தை ஜார்ஜிடம் தன் போகத்தை வெளிபடுத்திவிட்டு புறப்படுகிறார்.

  இரவு முழுவதும் தன்னுடன் மது அருந்திய மகன், காலையில் திருமணத்துக்கு வராமல் எங்கே சென்றிருப்பான் என குழப்பும் ஜார்ஜ், மகனை தேடி கண்டுப்பிடிக்க புறப்படுகிறார். தந்தை ஜார்ஜ், மகனை கண்டுபிடித்தாரா?, மண்ணுக்குள் புதைந்துகிடக்கும் ஆண்டனி வெளியே வந்தாரா? என்ற கேள்விகளுக்கு விடையை தேடி பயணிக்கிறது மீதிக்கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie ஆன்டனி with us? Please send it to us (popcorn@oneindia.co.in).