X
ஆன்டனி

ஆன்டனி

Musical | 01 Jun 2018 |
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

ஆன்டனி கதை

ஆன்டனி தமிழ் இசை மற்றும் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் குட்டி குமார்  இயக்க, லால், நிஷாந்த், ரேகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.  கதை: கதாநாயகன் ஆண்டனி (நிஷாந்த்), கொடைக்கானல் நகரின் ஸ்டிரிக்டான போலீஸ் எஸ்.ஐ. அவரது தந்தை ஜார்ஜும் (லால்) முன்னாள் போலீஸ் அதிகாரி. தாய் மேரி (ரேகா) விபத்தில் கால்களை இழந்த மாற்றுத்திறனாளி. ஆண்டனியின் காதலி மகா (வைஷாலி) லேடிஸ் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பெண் இளம். ஜார்ஜின் போலீஸ் நண்பர் சம்பத்ராம். படம் துவங்கியதுமே ஹீரோ ஆண்டனி ஒரு காருக்குள் இருந்து மயக்கம் தெளிகிறார். தான் எங்கே இருக்கிறோம் என தெரியாமல் குழம்பும் ஹீரோவுக்கு, சிறிது நேரம் கழித்துதான் காருடன் மண்ணுக்குள் புதைந்து கிடப்பது புரிகிறது. பதற்றமடையும் ஹீரோ தன்னை யார் இங்கு அடைத்து வைத்திக்கிறார் என புரியாமல், வெளியேற முயல்கிறார். ஆனால் அவரால் முடியவில்லை. இதற்கிடையே, ஹீரோயின் மகா, காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக, சார் பதிவாளர் அலுவலகம் முன் காத்திருக்கிறார். வெகு நேரம் ஆகியும் ஆண்டனி வராததால், அவரது தந்தை ஜார்ஜிடம் தன் போகத்தை வெளிபடுத்திவிட்டு புறப்படுகிறார். இரவு முழுவதும் தன்னுடன் மது அருந்திய மகன், காலையில் திருமணத்துக்கு வராமல் எங்கே சென்றிருப்பான் என குழப்பும் ஜார்ஜ், மகனை தேடி கண்டுப்பிடிக்க புறப்படுகிறார். தந்தை ஜார்ஜ், மகனை கண்டுபிடித்தாரா?, மண்ணுக்குள் புதைந்துகிடக்கும் ஆண்டனி வெளியே வந்தாரா? என்ற கேள்விகளுக்கு விடையை தேடி பயணிக்கிறது மீதிக்கதை.
Read More

ஆன்டனி நடிகர்கள் & படக்குழுவினர்

ஆன்டனி அணியின் தகவல்

இயக்குனர் குட்டி குமார்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஆன்டனி விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
ஆண்டனி மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் நிஷாந்துக்கு முதல் படத்திலேயே கனமான பாத்திரம். மண்ணுக்குள் புதைந்து பெரும் சிரமப்பட்டிருக்கிறார். ஓரளவுக்கு திறம்படவே நடித்திருக்கிறார். ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கும் வைஷாலிக்கு, வழக்கமான தமிழ் சினிமா நாயகிக்கான டெம்பிளேட் கதாபாத்திரம். பெரிதாக வேலை ஒன்றும் இல்லை. தமிழ் சினிமாவில் வில்லனாகவே பார்த்து பழக்கப்பட்ட லாலுக்கு, மகனை தேடும் தந்தை பாத்திரம். அவரளவுக்கு சரியாக செய்திருக்கிறார். ரேகாவிற்கு பெரிதாக எந்த வேலையும் இல்லை. சும்மா வந்து போகிறார். வில்லனாக அறிமுகமாகி இருக்கம் தயாரிப்பாளர் வெப்பம் ராஜா, சுமார் ரகத்தில் மிரட்ட முயல்கிறார். இந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ஆண்டனி.அதைத்தவிர படத்தில் புதிதாக எதுவும் இல்லை.

ஆன்டனி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஆன்டனி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+