அசுரகுரு இயக்குனர் அ. ராஜ்தீப் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஜே எஸ் பி சதீஷ் தயாரிக்க, இசையமைப்பாளர் சைமன் கே கிங் பின்னணி இசையில், இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார்.
அதிரடி மற்றும் திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் லாரென்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுடன் பல தடைகளை தாண்டி 2002 மார்ச் 13ல் தமிழ் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் இயக்குனர் எ. ராஜ்தீப், இயக்குனர் மோகன் ராஜாவிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர். தற்போது இவர் இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் நாயகியாக மஹிமா நம்பியார் மற்றும் நகைச்சுவையாளர் யோகிபாபு மற்றும் நாகிநீடு, சுப்பாராஜு, குமரவேல் என பல திரைப்பட முன்னணி கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர்.