அட்டகத்தி 2012ல் வெளிவந்த நகைச்சுவை திரைப்படமாகும். இதை இயக்கியவர் பா. இரஞ்சித், இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக பணியாற்றியவர். தினேஸ், நந்திதா, ஐஸ்வரியா நடித்துள்ளனர்.
கதை:
தினகரன் (தினேஷ்) டுடோரியலில் படித்து ஆங்கில தேர்வில் போராடும் சராசரி கிராமத்து இளைஞன். சாலையில் நிற்கும் பேருந்தில் பார்க்கும் அத்தனை பெண்களிடமும் காதலை வெளிப்படுத்தும் ஆள். ஆனால் எல்லா காதலும் சொதப்பி விடுகின்றது. ஆனாலும் காதலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கின்றார். அவன் காதலில் ஜெயித்தாரா? என்பதே மீதிக்கதை..