பில்லா பாண்டி இயக்குனர் சரவண சக்தி இயக்கத்தில், ஆர் கே சுரேஷ், இந்துஜா, சாந்தினி , யோகிபாபு, நமோ நாராயணா , இயக்குநர் மாரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆர் கே சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சுரேஷ் நடிகர் அஜித்தின் ரசிகராக நடித்துள்ளார்.
கதை :
அணைத்'தல'ப்பட்டி அஜித் ரசிகர் மன்றத் தலைவர் பில்லா பாண்டி (ஆர்.கே.சுரேஷ்), அஜித்தின் புகைப்படத்தை பூஜையறையில் வைத்து கும்பிடும் அளவுக்கு தீவிர பக்தர். கட்டிட தொழில் செய்யும் பில்லா பாண்டிக்கு அவரது மாமா மாரிமுத்துவின் மகள் சாந்தினி மீது காதல். சாந்தினிக்கும் பில்லா பாண்டி தான் உயிர். ஆனால் இவர்களது காதல் மாரிமுத்துக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் வெளியூருக்கு கட்டிட வேலைக்கு செல்லும் பில்லா பாண்டி மீது இந்துஜாவுக்கு ஒருதலை காதல். இந்த விஷயம் இந்துஜாவின் தந்தைக்கு தெரியவர, பாண்டியை அடித்து விரட்டுகிறார். இந்த விஷயம் ஊர் முழுவதும் பரவ, பில்லா பாண்டியின் காதலுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. கடைசியில் பில்லா பாண்டி யாருடன் ஜோடி சேர்கிறார் என்பதை சென்டிமெண்ட் கலந்து உணர்வுபூர்வமாக சொல்கிறது படம்.