X
தமிழ் » திரைப்படங்கள் » பில்லா பாண்டி
பில்லா பாண்டி

பில்லா பாண்டி

Action | 06 Nov 2018 |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

பில்லா பாண்டி கதை

பில்லா பாண்டி இயக்குனர் சரவண சக்தி இயக்கத்தில், ஆர் கே சுரேஷ், இந்துஜா, சாந்தினி , யோகிபாபு, நமோ நாராயணா , இயக்குநர் மாரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆர் கே சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சுரேஷ் நடிகர் அஜித்தின் ரசிகராக நடித்துள்ளார். கதை :  அணைத்'தல'ப்பட்டி அஜித் ரசிகர் மன்றத் தலைவர் பில்லா பாண்டி (ஆர்.கே.சுரேஷ்), அஜித்தின் புகைப்படத்தை பூஜையறையில் வைத்து கும்பிடும் அளவுக்கு தீவிர பக்தர். கட்டிட தொழில் செய்யும் பில்லா பாண்டிக்கு அவரது மாமா மாரிமுத்துவின் மகள் சாந்தினி மீது காதல். சாந்தினிக்கும் பில்லா பாண்டி தான் உயிர். ஆனால் இவர்களது காதல் மாரிமுத்துக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் வெளியூருக்கு கட்டிட வேலைக்கு செல்லும் பில்லா பாண்டி மீது இந்துஜாவுக்கு ஒருதலை காதல். இந்த விஷயம் இந்துஜாவின் தந்தைக்கு தெரியவர, பாண்டியை அடித்து விரட்டுகிறார். இந்த விஷயம் ஊர் முழுவதும் பரவ, பில்லா பாண்டியின் காதலுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. கடைசியில் பில்லா பாண்டி யாருடன் ஜோடி சேர்கிறார் என்பதை சென்டிமெண்ட் கலந்து உணர்வுபூர்வமாக சொல்கிறது படம்.
Read More

பில்லா பாண்டி நடிகர்கள் & படக்குழுவினர்

பில்லா பாண்டி அணியின் தகவல்

இயக்குனர் ராஜ் சேதுபதி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பில்லா பாண்டி விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
வில்லனாக அறிமுகமாகி குணச்சித்திர நடிகராக மாறிய ஆர்.கே.சுரேஷ், இந்த படம் மூலம் ஹீரோவாக புரோமோஷன் பெற்றிருக்கிறார். காதல், சென்டிமெண்ட் காட்சிகளில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அஜித் ரசிகராக தல வசனங்களை அவர் பேசும்போது தியேட்டரில் கைத்தட்டல்கள் பறக்கின்றன. ஆக்ஷன் காட்சிகளில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். லேசாக ராஜ்கிரண் சாயல் தெரிகிறது. சாந்தினி, இந்துஜா என படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும், இருவருக்குமே பெர்பாமன்ஸ் செய்ய நிறைய வாய்ப்புகள் படத்தில் இருக்கின்றன. நிறைவாகவே செய்திருக்கிறார்கள். நகரத்து கதாபாத்திரத்திலேயே பார்த்த சாந்தினிக்கு முதல் முறையாக கிராமத்து முறைப்பெண் வேடம். சிறப்பாக நடித்திருப்பது மட்டுமின்றி, அழகாக ஜொலிக்கிறார். இந்துஜா எளிமையாக வந்து, பெர்பாமன்ஸ் செய்து கவர்கிறார். தம்பி ராமையாவின் காமெடி லேசாக கிச்சுகிச்சு மூட்டுகின்றன. அமுதவாணனை இன்னும் கூட பயன்படுத்தி இருக்கலாம். கெஸ்ட் ரோலில் வரும் சூரியும், விதார்த்தும் சர்ப்ரைஸ் மொமண்ட் தருகிறார்கள். தயாரிப்பாளர் கே.சி.பிரபாத்துக்கு வில்லன் புரோமோஷன். இவர்களை தவிர, சௌந்தரராஜன், மாரிமுத்து, சங்கிலி முருகன் உள்ளிட்டோர் படத்தில் 'நடித்திருக்கிறார்கள்'. காமெடி நடிகராக அறியப்பட்ட ராஜ் சேதுபதி இப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். கதைக்காக பெரிதாக மெனக்கெடாமல், எம்எம்எஸ் மூர்த்தியின் கதையை எடுத்துக்கொண்டு, அதை வியாபார ரீதியாக மெருகேற்றியிருக்கிறார். முதல் பாதி படம் எதை நோக்கி செல்கிறது என்பதே புரியவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் சென்டிமெண்ட் மசாலாவை தூவி பி மற்றும் சி சென்டர் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள். இதனால் ஒரு முழு படமாக திருப்தி தருகிறான் இந்த பில்லா பாண்டி. மொத்தத்தில் அஜித் ரசிகர்களுக்கு 'தல தீபாவளி' விருந்தாக வந்திருக்கிறது பில்லா பாண்டி.

பில்லா பாண்டி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

பில்லா பாண்டி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+