நான் நடிச்சதுலேயே ரொம்ப மோசமான படம்னா அது தான்.. நானே வருவேன் நடிகை இந்துஜா ஓப்பன் டாக்!

சென்னை: மேயாத மான், பிகில், நானே வருவேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை இந்துஜா தான் நடிச்சதுலேயே மிகவும் மோசமான படம் என்றால் அந்த படம் மட்டும் தான் என பேசியுள்ள லேட்டஸ்ட் பேட்டி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான நானே வருவேன் படத்தில் இவர் தான் ஹீரோயின்.

விஜய் டிவியின் புதிய சேனலான விஜய் டக்கருக்கு இவர் அளித்துள்ள சிறப்பு பேட்டி வீடியோ தற்போது டிரெண்டாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மேயாத மான் படத்தில் அறிமுகம்

மேயாத மான் படத்தில் அறிமுகம்

ரத்னகுமார் இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளியான மேயாத மான் படத்தில் வைபவ் தங்கை மலர்விழியாக வந்து குத்தாட்டம் போட்டிருப்பார் இந்துஜா. முதல் படத்திலேயே ஹீரோயின் பிரியா பவானி சங்கருக்கு கிடைத்த அதே வரவேற்பு தங்கை கதாபாத்திரத்தில் நடித்த இந்துஜாவுக்கும் கிடைக்க உடனடியாக ஹீரோயினாகவும் இவர் மாறிவிட்டார்.

பிகில் வேம்பு

பிகில் வேம்பு

மெர்க்குரி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இந்துஜா ரவிச்சந்திரன் அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்த பிகில் படத்தில் கிராப் தலையுடன் வேம்பு எனும் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து கலக்கி இருப்பார்.

தனுஷ் ஜோடி

தனுஷ் ஜோடி

அதன் பிறகு மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரே ஒரு சின்ன கேமியோ கேரக்டரில் வந்து சென்ற இந்துஜா ரவிச்சந்திரன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் படத்தில் புவனா என்கிற கதாபாத்திரத்தில் தனுஷுக்கு மனைவியாக நடித்து அசத்தி உள்ளார். இந்நிலையில், தான் நடித்ததிலேயே தனக்கு பிடிக்காத படம் என்றால் அந்த படம் தான் என வெளிப்படையாக அவர் அளித்துள்ள பேட்டி டிரெண்டாகி வருகிறது.

மோசமான படம்

மோசமான படம்

மெர்க்குரி படத்தின் மூலம் ஹீரோயினாக மாறிய இந்துஜா 2018ல் ஆர்கே சுரேஷுக்கு ஜோடியாக பில்லா பாண்டி படத்தில் நடித்திருந்தார். அந்த படம் தான் தனது நடிப்பிலேயே வெளியான ரொம்ப மோசமான படம் என விஜய் டக்கரில் அளித்த பேட்டியில் இந்துஜா ரவிச்சந்திரன் செம ஓப்பனாக பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பாவம் ஆர்கே சுரேஷ்

பாவம் ஆர்கே சுரேஷ்

அஜித்தின் ரசிகராக பில்லா பாண்டி படத்தில் ஆர்கே சுரேஷ் நடித்திருப்பார். சமீபத்தில் கூட சில சினிமா நிகழ்ச்சியில் அந்த படத்தை பற்றி பெருமையாக பேசி வந்தார். இந்நிலையில், இந்த பேட்டியை அவர் பார்த்தால் அவரது நிலைமை என்னவாகும் என நெட்டிசன்கள் அவருக்கு இந்த பேட்டி வீடியோவை டேக் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X