ப்ளூ ஸ்டார் - இயக்குனர் எஸ் ஜெயக்குமார் இயக்கத்தில் ஷாந்தனு, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் என பல தமிழ் சினிமா பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தமிழ் பட இயக்குனர் பா ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த இசையமைத்துள்ளார்.
ஸ்போர்ட்ஸ் ட்ராமா படமாக உருவாகியுள்ள 'ப்ளூ ஸ்டார்' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் செல்வா ஆர் கே எடிட்டிங் செய்துள்ளார்.
2024ஆம் ஆண்டு ஜனவரி 26ல் குடியரசு தின சிறப்பு திரைப்படமாக 'ப்ளூ ஸ்டார்' திரைப்படம் உலகமுழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு /ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
இயக்குனர் பா ரஞ்சித்-ன் நீலம் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்த இப்படத்தினை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றி விநியோகம் செய்துள்ளார்.
ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் கதை
அரக்கோணம் பகுதியில் ப்ளூ ஸ்டார் மற்றும் ஆல்பா என இரு கிரிக்கெட் அணி உள்ளது. ப்ளூ ஸ்டார் அணையில் கேப்டனாக அசோக் செல்வன், ஆல்பா அணியில் கேப்டனாக ஷாந்தனு இருக்கின்றனர். இரு சமூகத்தை சார்ந்த இவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உடையவர்களாக இருக்க, இவர்களுக்கு நடக்கும் போட்டி சமூக பிரச்சனைகளாக மாறுகிறது.
ஒரு கட்டத்தில் இரு அணிகளுக்கும் இடையே போட்டி நடக்க, ஆல்பா அணி வேறு ஒரு கிளப் அணியை பணம் கொடுத்து சில வீரர்களை வாங்கி களத்தில் இறக்கி வெற்றி பெறுகிறார். MCF கிளப் வீரர்களால் அவமானப்படுத்தப்படும் ஷாந்தனு அவர்களை வீழ்த்த புதிய அணியை தொடங்குகிறார்.
அசோக் செல்வன், ஷாந்தனு இருவரும் இணைந்து புதிதாக ஒரு அணியை உருவாக்கி அந்த MCF கிளப் கிரிக்கெட் அணியை வீழ்த்தினாரா இல்லையா என்பதே இப்படத்தின் கதை.