twitter

    பூமராங் கதை

    பூமராங் இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில், அதர்வா, மேகா ஆகாஷ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்த அதிரடி மற்றும் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார். மேலும் இத்திரைப்படம் விவசாயத்தை மையப்படுத்தி உருவான திரைக்கதை ஆகும்.

    இத்திரைப்படதின் இயக்குனர் ஜெயங்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து, ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்திருக்கும் திரைப்படம் பூமராங். இத்திரைப்படம் பல தடைகளை கடந்து இறுதியில் மார்ச் 1ம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மார்ச் 8ம் தேதியில் ரிலீஸ் ஆகி உள்ளது.

    கதை:

    காட்டுத்தீயில் சிக்கி முகம் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் சிவா. அவருக்கு அறுவைசிகிச்சை மூலம் முகம் மாற்ற ஏற்பாடுகள் நடக்கின்றன. அப்போது மூளை சாவடைந்த நிலையில் இருக்கும் சக்தி (அதர்வா)வின் முகத்தை எடுத்து சிவாவிற்கு வைக்கின்றனர் மருத்துவர்கள். பின் குணமடைந்து வீடு திரும்புகிறார் சிவா. சிவாவிற்கும், மேகா ஆகாஷ்-ற்கும் காதல் மலர்கிறது.

    எல்லாம் சரியாக போய்க்கொண்டிருக்கும் சிவாவின் வாழ்வில் தீடீரென சிவாவை கொல்ல முயற்சிகள் நடைபெறுகிறது. இதனால் தன்னுடைய புதிய முகம் தான் இந்த கொலை முயற்சிகளுக்கு காரணம் என அறிந்து, அந்த முகத்திற்கு சொந்தக்காரரான அதர்வா உண்மையில் யார் என அறிய தேடி செல்கிறார் சிவா.

    ஒரு பிரபல ஐடி கம்பெனியில் பணியாற்றும் சக்தி (அதர்வா), ஆர்.ஜே.பாலாஜி, இந்துஜா உள்ளிட்டவர்கள் கூண்டோடு வேலையில் இருந்து நீக்குகிறது நிறுவனம். பின்னர் என்ன செய்வது என அறியாது நின்றிருக்கும் அவர்கள் அதர்வாவின் குடும்ப நிலத்தில் விவசாயம் செய்யலாம் என முடிவெடுக்கிறார்கள்.

    ஆனால் தண்ணீர்க்காக 20 கிலோமீட்டர் வரை நடக்கவேண்டும் என்கிற சூழ்நிலை ஏற்படுகிறது. இதனை அறிந்த அதர்வா அந்த ஆற்றையும் அருகில் இருக்கும் ஆற்றையும் இணைத்தால் விடிவு பிறக்கும் என அங்கு அரசியல்வாதிகள் செயல்படாமல் இருப்பதை தட்டிக் கேட்கிறார். தன் நண்பர்களுடனும் மக்களுடனும் சேர்ந்து போராட்டம் நடத்துகிறார்.

    நதிகளை இணைக்கவேண்டும் என்ற அவர்களது ஆசை நிறைவேறியதா? இதையெல்லாம் அறிந்து தற்போது சிவா (அதர்வா) என்ன செய்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.   
    **Note:Hey! Would you like to share the story of the movie பூமராங் with us? Please send it to us ([email protected]).