X
பூமராங்

பூமராங்

Action | 08 Mar 2019 | U | 113 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

பூமராங் கதை

பூமராங் இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில், அதர்வா, மேகா ஆகாஷ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்த அதிரடி மற்றும் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார். மேலும் இத்திரைப்படம் விவசாயத்தை மையப்படுத்தி உருவான திரைக்கதை ஆகும். இத்திரைப்படதின் இயக்குனர் ஜெயங்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து, ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்திருக்கும் திரைப்படம் பூமராங். இத்திரைப்படம் பல தடைகளை கடந்து இறுதியில் மார்ச் 1ம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மார்ச் 8ம் தேதியில் ரிலீஸ் ஆகி உள்ளது. கதை : காட்டுத்தீயில் சிக்கி முகம் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் சிவா. அவருக்கு அறுவைசிகிச்சை மூலம் முகம் மாற்ற ஏற்பாடுகள் நடக்கின்றன. அப்போது மூளை சாவடைந்த நிலையில் இருக்கும் சக்தி (அதர்வா)வின் முகத்தை எடுத்து சிவாவிற்கு வைக்கின்றனர் மருத்துவர்கள். பின் குணமடைந்து வீடு திரும்புகிறார் சிவா. சிவாவிற்கும், மேகா ஆகாஷ்-ற்கும் காதல் மலர்கிறது. எல்லாம் சரியாக போய்க்கொண்டிருக்கும் சிவாவின் வாழ்வில் தீடீரென சிவாவை கொல்ல முயற்சிகள் நடைபெறுகிறது. இதனால் தன்னுடைய புதிய முகம் தான் இந்த கொலை முயற்சிகளுக்கு காரணம் என அறிந்து, அந்த முகத்திற்கு சொந்தக்காரரான அதர்வா உண்மையில் யார் என அறிய தேடி செல்கிறார் சிவா. ஒரு பிரபல ஐடி கம்பெனியில் பணியாற்றும் சக்தி (அதர்வா), ஆர்.ஜே.பாலாஜி, இந்துஜா உள்ளிட்டவர்கள் கூண்டோடு வேலையில் இருந்து நீக்குகிறது நிறுவனம். பின்னர் என்ன செய்வது என அறியாது நின்றிருக்கும் அவர்கள் அதர்வாவின் குடும்ப நிலத்தில் விவசாயம் செய்யலாம் என முடிவெடுக்கிறார்கள். ஆனால் தண்ணீர்க்காக 20 கிலோமீட்டர் வரை நடக்கவேண்டும் என்கிற சூழ்நிலை ஏற்படுகிறது. இதனை அறிந்த அதர்வா அந்த ஆற்றையும் அருகில் இருக்கும் ஆற்றையும் இணைத்தால் விடிவு பிறக்கும் என அங்கு அரசியல்வாதிகள் செயல்படாமல் இருப்பதை தட்டிக் கேட்கிறார். தன் நண்பர்களுடனும் மக்களுடனும் சேர்ந்து போராட்டம் நடத்துகிறார். நதிகளை இணைக்கவேண்டும் என்ற அவர்களது ஆசை நிறைவேறியதா? இதையெல்லாம் அறிந்து தற்போது சிவா (அதர்வா) என்ன செய்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.   
Read More

பூமராங் நடிகர்கள் & படக்குழுவினர்

பூமராங் அணியின் தகவல்

இயக்குனர் ஆர் கண்ணன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ரதன்
தயாரிப்பாளர் ஆர் கண்ணன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பூமராங் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
புதியமுகம் படத்திற்கு பிறகு முகமாற்று அறுவை சிகிச்சையை மையமாக வைத்து வெளிவந்துள்ள படம் என்பதால், பூமராங் புதிதாக தெரிகிறது. முதல் பத்து நிமிட காட்சிகள் நமக்கு புதிய உணர்வை ஏற்படுத்துகின்றன. யார் என்றே தெரியாத ஒருவரின் முகத்தை சூழ்நிலை காரணமாக மற்றொருவர் பொருத்திக்கொண்டால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை யோசித்த விதம் புதுமை. அதேபோல், இன்றைய காலகட்டத்தில் ஐடி துறையில், லேஆஃப், காஸ்ட்கட்டிங், பேரோல் ரிவிஷன் உள்ளிட்ட பெயர்களை வைத்துக்கொண்டு எப்படி எல்லாம் ஊழியர்களை வேலையைவிட்டு தூக்குகிறார்கள் என்பதை தெளிவாக காட்டியிருக்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன். படித்த இளைஞர்கள் தங்களுடைய திறமைகளை விவசாயம் சார்ந்த விஷயங்களுக்கு எப்படி எல்லாம் பயன்படுத்த முடியும் என்பது குறித்தும் படம் பேசுகிறது. இது தவிர நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்களும் படத்தில் இருக்கின்றன.

பூமராங் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • The international hera pheri movies is most popular in bollywood

  • please show realise date sir

  • akki sir mai aap ka bhaut bara fan hun sir mai aap ke liye ek achcha script rakha hun ok sir

  • hello sonil bahi ma app ka bohat bagha fan hooooo ma app se bohat pyaar kartaaa hoooo ma afghanistan mi hooo my police mi kam karta hoo moji jab pata chala ki app afghanistan aye hai mani bohat koshish kiii k app ki sat molakat karloo agar app per ..

  • Aksay is bollwid king........

×
2.5 /5 Your Rating

பூமராங்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+