twitter

    பூமிகா கதை

    பூமிகா இயக்குனர் ரதீந்திரன் ஆர் பிரசாத் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திகில் திரைப்படம். இப்படமானது வெள்ளித்திரையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 25வது படமாகும். இப்படத்தினை தமிழ் சினிமா இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்க, இசையமைப்பாளர் ப்ரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் பூமிகா திரைப்படம், பெண்களுக்கான முக்கியத்துவம் உள்ள திரைக்கதையில் உருவாகி பிரபலமாகியுள்ளது. இத்திரைப்படம் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் 2021 ஆகஸ்ட் 22ல் ஒளிபரப்பப்பட்டு, பின்னர் 2021 ஆகஸ்ட் 23ல் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    பூமிகா திரைப்படத்தின் கதை

    கதைக்கரு: இயற்க்கைக்கு எதிராக நாம் செயல் பட கூடாது , செயல்பட்டால் அந்த இயற்கை நமக்கு திரும்ப என்ன கொடுக்கும் என்பதே திகில் கலந்த திரைக்கதை.

    கதை:
    சம்யுக்தா (ஐஸ்வர்யா ராஜேஷ்)-ன் கணவர் கவுதம் (விது) கட்டுமான பணிகள் செய்யும் ஒரு கான்ட்ராக்டர். இவர் ஒரு கைவிடப்பட்ட வனப்பகுதியில் ஒரு டவுன்ஷிப் வில்லாவை உருவாக்க ஒப்பந்தம் பெறுகிறார். கவுதமின் தன் நெருங்கிய தோழி காயத்திரி (சூர்யா கணபதி), கட்டிடக் கலைஞரின் உதவியைப் பெற்று கட்டுமானத்தைத் திட்டமிடுகிறார். கவுதம், சம்யுக்தா, காயத்திரி, அதிதி (கவுதமின் சகோதரி - மாதுரி) வனப்பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு கட்டுமானத் திட்டத்திற்கு வருகை தருகின்றனர். 

    இருப்பினும், அவர்கள் விருந்தினர் மாளிகையில் பல அமானுஷ்ய நடவடிக்கைகளை அனுபவிக்கத் தொடங்குகிறார்கள், இது அவர்களுக்கு அதிர்ச்சியையும் பயத்தையும் தருகிறது. மெதுவாக, அவர்கள் காட்டுக்குப் பின்னால் உள்ள மர்மத்தை அவிழ்த்து விடுகிறார்கள். 

    பின் என்ன நடந்தது? இந்த முன்னணி கதாபாத்திரங்கள் ஏன் விருந்தினர் மாளிகையில் அமானுஷ்ய செயல்பாட்டை அனுபவித்தனர்? இயற்கைக்கு எதிராக இவர்கள் செய்யும் வேலை என்ன? என்பதே படத்தின் கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie பூமிகா with us? Please send it to us ([email protected]).