பிரம்மன் (2014) ஒரு அதிரடி மற்றும் காதல் தமிழ்த் திரைப்படம். சசி குமார், சந்தானம், தன்சிகா, லவண்யா நடித்து, கமலஹாசன் உதவியாளரான சாக்ரடீஸ் இயக்கி வெளிவந்த இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் லக்சுமி மஞ்சு.
கதை
திரைப்படத்தின் மீது தீராத காதல் கொண்ட சிவா குத்தகைக்கு கிடைத்த ஒரு திரையரங்கை திருமண மண்டபமாகவோ, வணிக வளாகமாகவோ உருமாறிவிடாமல் பார்த்துக்கொள்கிறார். அத்திரையரங்கில் பழைய படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டதால் ரூ ஐந்து இலட்சத்துக்கு கடனாளியாகிறார். தன் பழைய நண்பன் குமார் பெரிய இயக்குநராக இருப்பது அறிந்து உதவி கேட்க சென்னை வருகிறார். அங்கு சிவாவிற்கு எதிர்பாராத நல்லூழ் மூலம் பணம் கிடைக்கிறது. நண்பனை சந்திக்கிறார், ஆனால் குமாருக்கு சிவாவை தெரியவில்லை. அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் சிவா பெரும் இழப்புக்கு ஆளாகிறார். சிவாவின் நண்பனுக்கு உண்மை தெரியவரும்போது சிவா அதை எப்படி எதிர்கொள்கிறார்? என்பதை இயக்குநர் சுவையாக சொல்லியுள்ளார்.