கால்ஸ் இயக்குனர் சபரீஷ் இயக்கத்தில் பிரபல சின்னத்திரை நடிகை வி.ஜே.சித்ரா நாயகியை நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தில் நிழல்கள் ரவி, வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி என தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமீம் அன்சாரி இசையமைத்துள்ளார்.
கால்ஸ் திரைப்படத்தின் கதை
சென்னையில் உள்ள ஒரு தனியார் கால் சென்டர் நிறுவனத்தில் பணியாற்றும் நாயகி நந்தினி (சித்ரா) ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். சித்ரா பணியாற்றும் அலுவலகத்தில் இவருக்கு அளிக்கப்பட்டுள்ள டார்கெட்டை அடியமுடியாததால், இவருக்கு வேலையை இழக்கும் அபாய சூழல்கள் வருகிறது. இதையடுத்து பல வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு அவர்களின் இன்டர்நெட் பிளான்-யை புதுப்பிக்குமாறு கேட்கிறார். ஆனால் சித்ராவின் முயற்சி பயனளிக்கவில்லை.
பின் சித்ரா அன்றாட சந்திக்கும் பிரச்சனைகள் என கதை நகர்கிறது. எதிர்பாராமல் ஒரு மெடிக்கல் கிரைம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட கிரைமில் மாட்டிக்கொள்ளும் சித்ரா அதில் இருந்து எப்படி தப்பித்தார் என்பதே படத்தின் கதை.