X
கேப்டன் மில்லர்
Action | Crime | Drama | 12 Jan 2024 | U/A | 160 Mins
Tamil

கேப்டன் மில்லர் கதை

கேப்டன் மில்லர் இயக்குனர் அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவ ராஜ் குமார் என பல திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் தியாகராஜன் 'சத்யா ஜோதி பிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

அதிரடி திரைக்கதை படமாக உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சித்தார்த்த நுனி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் நாகூரான் ராமசந்திரன் எடிட்டிங் செய்துள்ளார். 



கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ள நிலையில், இப்படம் 2024 பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஸ்பெஷல் ரிலீஸ் படமாக திரையரங்கில் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.

கேப்டன் மில்லர் திரைப்படத்தினை சத்யா ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, இப்படத்தினை தமிழகம் முழுவதும் லைக்கா நிறுவனம் கைப்பற்றி விநியோகம் செய்துள்ளது. இப்படம் நடிகர் தனுஷ் திரைப்பயணத்தில் இவர் நடிக்கும் 47வது திரைப்படமாகும்.



கேப்டன் மில்லர் திரைப்படத்தின் கதை

கதைக்கரு: இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி செய்யும் காலகட்டத்தில் பிரிட்டிஷ் ராணுவ படையில் பணியாற்றும் தனுஷ், பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய மக்களுக்கு செய்யும் அநீதியை கண்டு இந்திய மக்களுக்காக ஆங்கிலேயரை எதிர்த்து போராடுவது தான் இப்படத்தின் கதைக்கரு.

கதை

கோயிலுக்கு அருகில் இருக்கும் குடிசைகளில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என அந்த பகுதி ராஜாவான ஜெயபிரகாஷ் அதிகாரம் செலுத்தி வருகிறார். ஆனால், அவரும் அவர் மகனுமான ஜான் கொக்கன் இருவரும் வெள்ளையர்களுக்கு அடிமைகளாக உள்ளனர். அந்த பெரிய வீட்டில் வளர்ப்பு மகளாக இருக்கும் வேல்மதி (பிரியங்கா மோகன்) போராளிகளின் இயக்கத்தில் சேர்ந்து விடுகிறார். அவரை கொல்ல ஜெயபிரகாஷ் ஆட்கள் வரும் போது தனுஷ் அவரை காப்பாற்றி அனுப்புகிறார்.

ஈசன் எனும் கதாபாத்திரத்தில் தனுஷும் அவரது அண்ணனாக செங்கோலன் எனும் கதாபாத்திரத்தில் சிவ ராஜ்குமாரும் நடித்துள்ளனர். போராட்ட இயக்கத்தில் செங்கோலன் செயல்பட்டு வரும் நிலையில், தனது தம்பியையும் தனது இயக்கத்திற்கு வர அழைக்கிறார். ஆனால், சுதந்திரத்தை வாங்கி இந்த ராஜாவுக்குத் தானே கொடுக்கப் போற அவனுங்க நம்மள கோயில் உள்ளே விட மறுக்கின்றனர். நான் பட்டாளத்துல போய் சேரப்போறேன் என ஆங்கிலேயர்களின் பட்டாளத்தில் தனுஷ் சேர்கிறார்.

பின்னர் சுதந்திர போராட்டத்திற்காக பாடுபடும் தனது மக்களையே சுட்டு வீழ்த்த வேண்டிய சூழல் வரும் போது தனுஷின் அண்ணன் செங்கோலன், பிரியங்கா மோகனின் கணவர் உள்ளிட்டோரை தனுஷ் சுட்டுக் கொன்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னர், அந்த பழி உணர்ச்சியில் இருந்து மீள கொள்ளைக் கூட்டத்தில் சேரும் தனுஷ் செய்யும் ஒரு காரியத்தால் அந்த ஊரையே ஆங்கிலேயர்கள் அழிக்க வருகின்றனர். ஆங்கிலேயர்களிடம் இருந்து தனது ஊரை தனுஷ் காப்பாற்றினாரா? கோயில்களுக்கு மக்கள் சென்றார்களா? அராஜகம் செய்த ராஜாவின் குடும்பத்தினர் என்ன ஆனர்கள்? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

கேப்டன் மில்லர் படத்தின் பிரத்யேக தகவல்கள்

நடிகர் தனுஷ் திரைப்பயணத்தில் கேப்டன் மில்லர் திரைப்படம் இவர் நடிக்கும் 47வது திரைப்படமாகும். இப்படம் முழுவதும் அதிரடி காட்சிகள் மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளனர். 2018ஆம் ஆண்டு இயக்குனர் அருண் மாதீஸ்வரன் இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் தியாகராஜன் நிறுவனத்தில் ஒப்படைத்து, நடிகர் தனுஷ் கால்சீட் பெற்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை 2019ல் வெளியிட்டனர்.

2020ல் படப்பிடிப்பை தொடங்க தயாரான படக்குழு கொரோனா ஊரடங்கு காரணத்தால் படப்பிடிப்பை நிறுத்தியது. பின் 2021ல் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினர், படக்குழுவினர்.

இப்படம் ஆரம்பமான தருணத்தில் D 47 என தற்காலிய தலைப்பில் இப்படத்தினை தொடங்கினர், படக்குழுவினர், இப்படத்தின் இயக்குனர் அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் ராக்கி (2021), சாணிக் காயிதம் (2022) ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. பின் கேப்டன் மில்லர் பட டைட்டிலை வெளியிட்டு இப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்தனர், படக்குழுவினர்.

கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க ஒரு முக்கிய கதாபத்திரத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ் குமார் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா, சுதீப் கிஷன், ஜான், பால சரவணன், இளங்கோ குமரவேல் என பல முக்கிய முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

2022 செப்டம்பர் மாதம் இப்படத்தின் பூஜை தொடங்கப்பட்டு இப்படம் சென்னை, தென்காசி இடங்களில் படப்பிடிப்பை நடித்துள்ளனர், படக்குழுவினர். இப்படத்தில் பல அதிரடி காட்சிகள் உள்ளதால் படப்பிடிப்பு தளத்தில் பொது மக்களுக்கு தொந்தரவாக இருக்கிறது என பல சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகளை சந்தித்தனர், படக்குழுவினர்.

2023 டிசம்பர் மாதம் 15ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மில்லர் திரைப்படம், இறுதியில் 2024 ஜனவரி 12ல் வெளியிட திட்டமிட்டு பொங்கல் தின ஸ்பெஷல் படமாக வெளியிட்டுள்ளனர், படக்குழுவினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+