twitter

    சோழ நாட்டான் கதை

    சோழ நாட்டான் இயக்குனர் ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் விமல், கார்ரொன்யா கேத்ரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம், இத்திரைப்படத்தினை தயாரிப்பு நிறுவனமான ஹரிஷ் பிலிம் ப்ரோடுக்ஷன் சார்பாக தயாரிப்பாளர் பாரிவள்ளல் தயாரிக்கிறார்.

    சோழ நாட்டான் திரைப்படத்தினை பற்றிய தகவல்கள்

    இப்படத்தின் நாயகியான கார்ரொன்யா கேத்ரின் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்து சிறந்த நடிகை மற்றும் நடனத்திற்கான தேசிய விருது பெற்றவர். இவர் சோழ நாட்டான் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.

    'விமல் நடிக்கும் சோழநாட்டான் பட பூஜை போட்டு பிரமாண்ட தளம் அமைத்து கிராபிக்ஸ் படபிடிப்பு நடந்தது.  அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சத்தியமங்கலம் காட்டில் உள்ள  மலைப்பகுதியில் தமிழ் சினிமா இதுவரை காணாத  காடுகளில் படப்பிடிப்பு  நடத்த திட்டமி ட்டுள்ளனர். தஞ்சாவூர், ஹைதராபாத்,  வைசாக்,  போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது.  வரலாற்றை அடிப்படையாக கொண்ட கதையில் விமல்  நடிக்கும் முதல் படம் 'சோழ நாட்டான்'. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும்.

    பொதுவாக ஒரு படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு தான் அப்படத்தின் இசையை வெளியிடுவார்கள். ஆனால், தற்போது தஞ்சாவூரில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த படம் சோழநாட்டை மையப்படுத்தி உருவாவதால், படப்பிடிப்பு பணிகளின் இடையே குடமுழுக்கை முன்னிட்டு சோழநாட்டை பெருமைப்படுத்தும் விதமாக பிப்ரவரி மாதத்திலேயே முதல் பாடலை வெளியிட உள்ளார்கள்.   இப்படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரக்த்தில்  முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருக்கின்றார்.
    மேலும் விமலுடன் காருண்ய கேதரின், தென்னவன், நாகி நாயுடு, சீதா, பரணி, டேனியல் பாலாஜி, சென்ட்ராயன், ராமர், தங்கதுரை,  போஸ் வெங்கட்,சௌந்தரபாண்டியன்  எம்.எஸ்.குமார்,  இன்னும் பலர் நடிக்கிறார்கள்.

    இப்படத்தை பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்க நட்சத்திர  பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். நவீன் ஷங்கர் இசையமைக்க கலைக்குமார் மற்றும் சபரீஷ் பாடல்கள் எழுதுகிறார்கள்.  பாரிவள்ளல் தயாரிக்க அவருக்கு இணை தயாரிப்பாளராக கை கொடுக்கிறார் ஐ.மனோகரன்.
    **Note:Hey! Would you like to share the story of the movie சோழ நாட்டான் with us? Please send it to us ([email protected]).