twitter

    D ப்ளாக் கதை

    D ப்ளாக் - யூ டியூப் எருமை சாணி சேனல் புகழ் விஜய் குமார் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம். இப்படத்தில் அருள்நிதி, அவந்திகா என பலர் நடித்துள்ளனர். திரில்லர் திரைக்கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ரான் எத்தன் யோஹன் இசையமைத்துள்ளார்.

    டி ப்ளாக் திரைப்படத்தின் கதை

    ஊருக்கு ஒதுக்குப் புறமான இடத்தில் கட்டப்பட்டுள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவராக என்ட்ரி கொடுக்கிறார் அருள்நிதி. இயக்குநர் விஜய்குமார் அவருக்கு நண்பராக கூடவே காமெடி பண்ணுகிறேன் என தனது படத்திற்கு பெரிய வேகத்தடையாக மாறி உள்ளார். 

    அந்த கல்லூரியின் லேடிஸ் ஹாஸ்டலில் இருக்கும் சில பெண்கள் மர்மமான முறையில் அவ்வப்போது மர்மான முறையில் இறந்து போகின்றனர். அவர்களை புலி அடிச்சிடுச்சு, சிறுத்தை அடிச்சிடுச்சு என கதை விடுகின்றனர். 

    ஆனால், இதற்கு காரணம் யார் என்பதை கண்டுபிடிக்கும் இன்வஸ்டிகேடிவ் அதிகாரியாக முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் அருள்நிதி எப்படி மாறுகிறார் என்பதும், உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்தாரா, அவரது அந்த பெரிய மோட்டிவ் என்ன? என்பது தான் இந்த படத்தின் கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie D ப்ளாக் with us? Please send it to us ([email protected]).