twitter
    Tamil»Movies»Dev»Story

    தேவ் கதை

    தேவ் இயக்குனர் ராஜாத் ரவிஷங்கர் இயக்கத்தில் நடிகர் கார்த்திக், ராகுல் பரீத் சிங்க், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ், மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் லக்ஷம் குமார் தயாரிக்க,  இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

    ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை ரூபன் கவனித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் "யு" சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி ரிலீசாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

    கதை 

    கார்த்தி வாழ்க்கையை மிகவும் ரசிப்புத்தன்மையுடன் வாழவேண்டும் என்று நினைக்கும் ஒரு பணக்கார இளைஞன், ராகுல் ப்ரீத் சிங் தொழில்துறையில் சாதிப்பது தான் தனது வாழ்க்கை என்று வாழும் ஒரு தொழிலதிபர். கார்த்தி, ரகுல் கதாபாத்திரங்களுக்கு இணையாக ரம்யா கிருஷ்ணனின் வேடமும் அமைக்கப்பட்டுள்ளது. 

    கார்த்தி, விக்னேஷ்காந்த், அம்ருதா மூன்று பேரும் பள்ளிப் பருவத்தில் இருந்தே நண்பர்கள். தான் எங்கு சென்றாலும் தனது நண்பர்களையும் உடன் அழைத்துச் செல்கிறார். இந்த நிலையில், தனது மேல்படிப்புக்காக கார்த்தி வெளிநாடு செல்ல வேண்டிய நிலை வர, விக்னேஷ்காந்த், அம்ருதாவையும் அழைத்து செல்கிறார்.

    இவ்வாறாக கார்த்தியின் தொல்லை தாங்க முடியாமல் தவிக்கும் விக்னேஷ்காந்த், அவரை காதலில் விழவைக்க திட்டமிடுகிறார். அதற்காக முகநூலில் பெண் தேடலில் ஈடுபட, ரகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படத்தை பார்க்கின்றனர். கார்த்திக்கு ரகுலை பார்த்த உடன் பிடித்து விடுகிறது.

    சிறு வயதிலேயே தனது தந்தையை பிரிந்த ரகுல், ஒரு தொழில்நிறுவனத்தை நடத்திக் கொண்டு தனது தாய் ரம்யா கிருஷ்ணனுடன் வாழ்ந்து வருகிறார். 

    ஆண்கள் என்றாலே வெறுக்கும் ரகுல் ப்ரீத் சிங்கை கார்த்தி எப்படி காதலில் விழ வைக்கிறார்? அவர்களுக்கிடையேயான நட்பு, காதல், பாசம், பிரிவு என்ன? கடைசியில் இருவரும் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.


    **Note:Hey! Would you like to share the story of the movie தேவ் with us? Please send it to us ([email protected]).