X
தேவ்

தேவ்

Adventure | 14 Feb 2019 | U | 158 Mins
Tamil

2.6 /5 Users

3 /5 Filmibeat

தேவ் கதை

தேவ் இயக்குனர் ராஜாத் ரவிஷங்கர் இயக்கத்தில் நடிகர் கார்த்திக், ராகுல் பரீத் சிங்க், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ், மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் லக்ஷம் குமார் தயாரிக்க,  இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை ரூபன் கவனித்துள்ளார்.  படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் "யு" சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி ரிலீசாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. கதை  கார்த்தி வாழ்க்கையை மிகவும் ரசிப்புத்தன்மையுடன் வாழவேண்டும் என்று நினைக்கும் ஒரு பணக்கார இளைஞன், ராகுல் ப்ரீத் சிங் தொழில்துறையில் சாதிப்பது தான் தனது வாழ்க்கை என்று வாழும் ஒரு தொழிலதிபர்.  கார்த்தி, ரகுல் கதாபாத்திரங்களுக்கு இணையாக ரம்யா கிருஷ்ணனின் வேடமும் அமைக்கப்பட்டுள்ளது.  கார்த்தி, விக்னேஷ்காந்த், அம்ருதா மூன்று பேரும் பள்ளிப் பருவத்தில் இருந்தே நண்பர்கள். தான் எங்கு சென்றாலும் தனது நண்பர்களையும் உடன் அழைத்துச் செல்கிறார். இந்த நிலையில், தனது மேல்படிப்புக்காக கார்த்தி வெளிநாடு செல்ல வேண்டிய நிலை வர, விக்னேஷ்காந்த், அம்ருதாவையும் அழைத்து செல்கிறார். இவ்வாறாக கார்த்தியின் தொல்லை தாங்க முடியாமல் தவிக்கும் விக்னேஷ்காந்த், அவரை காதலில் விழவைக்க திட்டமிடுகிறார். அதற்காக முகநூலில் பெண் தேடலில் ஈடுபட, ரகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படத்தை பார்க்கின்றனர். கார்த்திக்கு ரகுலை பார்த்த உடன் பிடித்து விடுகிறது. சிறு வயதிலேயே தனது தந்தையை பிரிந்த ரகுல், ஒரு தொழில்நிறுவனத்தை நடத்திக் கொண்டு தனது தாய் ரம்யா கிருஷ்ணனுடன் வாழ்ந்து வருகிறார்.  ஆண்கள் என்றாலே வெறுக்கும் ரகுல் ப்ரீத் சிங்கை கார்த்தி எப்படி காதலில் விழ வைக்கிறார்? அவர்களுக்கிடையேயான நட்பு, காதல், பாசம், பிரிவு என்ன? கடைசியில் இருவரும் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
Read More

தேவ் நடிகர்கள் & படக்குழுவினர்

தேவ் அணியின் தகவல்

இயக்குனர் ராஜாத் ரவிஷங்கர்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஹாரிஸ் ஜெயராஜ்
தயாரிப்பாளர் லக்ஷம் குமார்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

தேவ் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
படத்தில் எல்லாமே பாசிவிடிவாக இருப்பதால், சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடுகிறது. மேலும் படம் மெதுவாக நகர்வதும், எல்லோரும் பேசிக்கொண்டே இருப்பதும் சலிப்பை தான் தருகிறது. இதுபோன்ற காதல் கதைகள் பலமுறை தமிழில் வந்துவிட்டன என்பதையும் இயக்குனர் நினைவில் கொள்ள வேண்டும். இருப்பினும் எளிதில் பார்க்க முடியாத பல இடங்களை சுற்றி காண்பித்ததற்காக தேவ் படக்குழுவுக்கு மிக்க நன்றி. 'தேவ்' ஒரு சுகமான, அதேசமயம் பொறுமையை சோதிக்கும் மெதுவான பயணம்.

தேவ் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

தேவ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+