X
தனுசு ராசி நேயர்களே
Drama | Romance | 06 Dec 2019 | U/A | 120 Mins
Tamil

தனுசு ராசி நேயர்களே கதை

தனுசு ராசி நேயர்களே இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரெபா மோனிகா ஜான் நடிக்கும் காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் தனது ஸ்ரீ கோகுலம் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர்  ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

காதல் மற்றும் நகைச்சுவை பாணியில் உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பி கே வர்மா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் குபேந்திரன் எடிட்டிங் பணி செய்துள்ளார்.

தனுசு ராசி நேயர்களே படத்தின் பிரத்தியேக தகவல்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களால் கண்டறியப்பட்ட இப்படத்தின் நாயகன் ஹரிஸ் கல்யாண் திரையுலகில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தொடர்ந்து காதல் படங்களுக்கே முக்கியத்துவம் அளித்து நடித்து வருகிறார். 

இத்திரைப்படத்தின் நடிப்பதற்காக பல நடிகைகளை தேர்வு செய்து நீராகரித்தும் உள்ளனர் இப்படக்குழுவினர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் நவம்பர் 7ல் இணையதள பக்கத்தில் வெளியாகி பிரபலமாகியது. அந்த அறிவிப்பில் தான் இப்படத்தின் நாயகியை பற்றி அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியானது. இப்படத்தின் ட்ரைலர் நவம்பர் இறுதியில் வெளியாகி ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

தனுசு ராசி நேயர்களே படத்தின் இயக்குனர் சஞ்சய் பாரதி, தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்கள் நடித்து பிரபலமாகியுள்ள சந்தன பாரதியின் மகன் ஆவார்.

தனுசு ராசி நேயர்களே படத்தின் கதை

இப்படத்தின் நாயகனான ஹரிஷ் கல்யாண் ஒரு இயந்திரவியல் துறையில் பணியாற்றி வருபவர். இவர் ஜோதிடம் மற்றும் சாஸ்திரங்களில் அதிகம் ஈடுபாடு உடையவர். எந்த ஒரு செயலினை தொடங்க நினைத்தாலும் ஹரிஷ் ஜாதத்தின் அடிப்படையில் தான் முடிவு செய்வார். இவரின் திருமணத்திற்காக இவர் ஜோதிடர் இடம் செல்கிறார். இவர் ராசிக்கு ஒரு கன்னி ராசி பெண்ணை திருமணம் செய்யுமாறு அறிவுறுத்தும் ஜோதிடரின் பேச்சை கேட்டு கன்னி ராசி உள்ள பெண்களை தேடுகிறார் ஹரிஷ்.

கன்னி ராசி பெண்களை தேடும் ஹரிஸ், மன உறுதியோடு இவர் எந்த ஒரு முடிவும் எடுக்காததால் இவர் காதல் கதை திசை மாறி செல்கிறது. ஒன்றுக்கு மூன்று பெண்களை காதலிக்கிறார் ஹரிஷ். (பிக் பாஸ் புகழ்) ரைசா, ரெபா மோனிகா ஜான், மற்றும் டிகங்கனா சூர்யவன்ஷி ஆகிய மூவரை காதலிக்கிறார் ஹரிஷ்.

இதனால் இவர் பல பிரச்சனைகளில் சிக்கி தவிக்கிறார். இதற்கு பின்னர் இவர் எடுக்கும் முடிவுகளும் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் தான் இப்படத்தின் நகைச்சுவை கலந்த திரைக்கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+