X
துருவ நட்சத்திரம்
Action | 14 Dec 2025 | U/A | 145 Mins
Tamil

துருவ நட்சத்திரம் கதை

துருவ நட்சத்திரம் -யுத்த காண்டம், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தின் இயக்குனரான கவுதம் மேனன் தானே துருவ நட்சத்திரம் படத்தினை (ஒன்றாக என்டர்டைன்மெண்ட்) நிறுவனத்தின் மூலம் தயாரித்து தயாரிப்பாளராக அவதரித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

ஸ்பை - திரில்லர் திரைக்கதையில் மிரட்டும் ஆக்ஷன் காட்சிகளில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்திற்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஸா, எஸ் ஆர் கதிர் மற்றும் விஷ்ணு தேவ் இணைந்து ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஆன்டனி எடிட்டிங் செய்துள்ளார்.

துருவ நட்சத்திரம் திரைப்படத்தின்  புகைப்படங்கள்

துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் பாடல்கள்

துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் விக்ரம் நாயகனாக முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ரித்து வர்மா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், வம்சி, சதிஷ், மாயா எஸ் கிருஷ்ணன் என பல முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

துருவ நட்சத்திரம் படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் பல போராட்டங்களுக்கு பின் 2023 நவம்பர் 24ல் உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகும் என திர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் இப்படம் வெளியீட்டிற்கு தள்ளி சென்றுள்ளது.

துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் படக்குழு & திரை நட்சத்திரங்கள்

துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் டீசர், டிரைலர் & பாடல் வீடியோக்கள்

துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் கதை

கதைக்கரு: இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பிற்காக ரகசிய குழு ஒன்றினை நியமிக்கின்றனர். 11 நபர்கள் கொண்ட அந்த குழுவிற்கு கேப்டனாக விக்ரம் இருக்கிறது. தீவிரவாத செயல்களை கண்காணிப்பது மற்றும் அவர்களை தடுப்பது போன்ற பணிகளை அந்த ரகசிய குழு செய்து வருகிறது. சிலருக்கு இந்த தகவல்கள் தெரியவர, இந்த குழுவை நியமித்த அதிகாரியை கடத்தி இந்த குழுவை மிரட்டுகின்றார், வில்லன். இதனை விக்ரம் எப்படி சமாளித்து அவர்களை அழிக்கிறார் என்பதே படத்தின் கதைக்கரு.

துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள்

துருவ நட்சத்திரம் திரைப்படம் 2013 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழு சார்பில் வெளியானது. பின்னர் நடிகர் சூர்யா இந்த படத்தில் இருந்து விலக, பல நடிகர்களோடு நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு பின் இறுதியில் விக்ரம் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. 

2017 ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் படக்குழு, 7 வெவ்வேறு நாடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். பின் இந்த படத்தின் தயாரிப்பு செலவுக்காக கடன் சுமையில் சிக்கிய கவுதம் மேனன், சில ஆண்டுகளாக இந்த படத்தினை நிறுத்திவைத்துள்ளார்.

கோவிட் நாட்களுக்கு பின் 2023 பிப்ரவரி மாதம் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, பல போராட்டங்களுக்கு இப்படம் 2023 நவம்பர் 24ல் வெளியாகும் என திர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் இப்படம் வெளியீட்டிற்கு தள்ளி சென்றுள்ளது. துருவ நட்சத்திரம் திரைப்படம் மொத்தம் 4:30 மணி நேரங்கள் உருவாகியுள்ளது என அறிந்த படக்குழு இந்த காட்சிகளை சுருக்காமல் இரண்டு பாகமாக வெளியிட திட்டமிட்டுள்ளது. முதல் பாகம் துருவ நட்சத்திரம் - யுத்த காண்டம் என்ற தலைப்பில் வெளியாக காத்திருக்கிறது.

துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ஆன்லைன் ஓடிடி ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் இப்படத்தின் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான உரிமையை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+