டைரி இயக்குனர் இன்னசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி, பவித்ரா மாரிமுத்து, அஜய் ரத்னம் என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் கிரைம் - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எஸ். கதிரேசன் தனது 5 ஸ்டார் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ரான் எத்தன் யோஹன் இசையமைத்துள்ளார்.
ஒரு கிரைம் - திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் எஸ் பி ராஜா சேதுபதி எடிட்டிங் செய்துள்ளார்.
டைரி திரைப்படம் 2022, ஆகஸ்ட் 26ல் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
டைரி திரைப்படத்தின் கதை
கதைக்கரு
எஸ்.ஐ பயிற்சியை முடித்து விட்டு போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்கும் ஹீரோ அருள்நிதி பல வருடங்களாக பிடிபடாமல் இருக்கும் கொள்ளை கும்பலை பற்றிய வழக்கை கையில் எடுக்கிறார். மறுபுறம் ஒரு பேருந்தில் பல வித முகங்கள் பல வித பின் கதைகளுடன் அந்த பேருந்தில் பயணித்து வருகின்றன. கோவை டூ உதகை செல்லும் வழியில் 13வது ஹேர்பின் பெண்டில் அடிக்கடி விபத்து நடக்கிறது. இந்த மூன்று கதைகளும் எப்படி சங்கமிக்கின்றன இது பேய் படமா? அல்லது த்ரில்லர் படமா? என்பது தான் டைரி படத்தின் கதைக்கரு.