twitter
    Tamil»Movies»Don»Story

    டான் கதை

    டான் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நகைச்சுவை - திரில்லர் திரைப்படம். 

    டான் படத்தினை நாயகன் சிவகார்த்திகேயன் ஃபர்ஸ்ட் காபி அடிப்படையில் தயாரித்து பின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது லைக்கா தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

    தமிழ் திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கே எம் பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் நகூரன் எடிட்டிங் செய்துள்ளார். இத்திரைப்படமானது நடிகர் சிவகார்த்திகேயனின் திரைவாழ்வில் இவர் நடிக்கும் 19வது (எஸ்.கே.19) படமாகும். டான் திரைப்படம் பல போராட்டங்களுக்கு பின்னர் 2022 மே 13ல் திரையரங்குகளில் வெளியானது.




    டான் திரைப்படத்தின் கதை

    கதைக்கரு

    தான் பட்ட கஷ்டங்கள் தனது பிள்ளைக்கு வரக்கூடாது என கண்டிஷனாக இருக்கும் தந்தை, மாணவர்களின் ஒழுக்கம் தான் அவர்களை சிறந்த எதிர்காலத்துக்கு வழிவகுக்கும் என கண்டிஷனாக இருக்கும் கல்லூரி நிர்வாகம். இவ்விரண்டிற்கும் இடையில் மாட்டிக்கொள்ளும் சிவகார்த்திகேயன், எப்படி இதனை சமாளித்த வாழ்க்கையில் வெற்றி பெற்றார் என்பதே படத்தின் கதை.

    கதை 

    தனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என ஆசைப்படும் சமுத்திரக்கனிக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தொடக்கத்திலையே சமுத்திரக்கனிக்கு ஏமாற்றம் தான். கிராமத்தில் வாழும் சமுத்திரக்கனி தான் பட்ட கஷ்டங்கள் தனது பிள்ளைக்கு வரக்கூடாது என தனது மகன் சக்கரவர்த்தி (சிவகார்த்திகேயன்)-யை மிகவும் கண்டிஷனாக வளர்க்கிறார்.

    சிவகார்த்திகேயனை படித்து பெரிய ஆளாக்க நினைக்கிறார் சமுத்திரக்கனி, படித்தால் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என படி படி என்று சிவகார்த்திகேயனிடம் ஸ்ட்ரிட்டாக இருக்க, ஒரு கட்டத்தில் எரிச்சலாகும் சிவகார்த்திகேயன் படிக்காமல் திறமையை அடிப்படையாக்கி வாழ்க்கையில் முன்னேறலாம் என முடிவெடுக்கிறார்.

    பள்ளி பருவத்தில் நாயகி பிரியங்கா மோஹனை சந்திக்கும் சிவா, காதலில் விழுகிறார். பின் காதல் கதை ஒரு பக்கம் நகர்கிறது. பள்ளியை முடித்து பொறியியல் (Engineering) கல்லூரியில் சேரும் சிவா தன் கல்லூரி வாழ்க்கையை ஜாலியாக வாழ்கிறார்.

    மாணவர்களின் ஒழுக்கம் தான் அவர்களை சிறந்த எதிர்காலத்துக்கு வழிவகுக்கும் என கண்டிஷனாக கல்லூரி பேராசிரியர் எஸ் ஜே சூர்யா வைலெண்ட்டாகவும், மாணவர்களின் எதிர்காலத்தில் அக்கறையோடு உள்ளார். கல்லூரியில் பேராசிரியராக உள்ள எஸ் ஜே சூர்யாவிற்கு - சிவகார்த்திகேயனுக்கும் இடையே மோதல்கள் தொடங்குகிறது.

    இவர்களுது மோதல் முடிவில் சிவாவின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் கதை. தனது திறமையை கண்டறிந்து வாழ்வில் சிவகார்த்திகேயன் ஜெயித்தாரா! இல்லையா! என்பது தான் படத்தின் எமோஷனல் கிளைமக்ஸ்.

    டான் திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள்

    டான் திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனின் 19வது திரைப்படமாகும். இப்படத்தின் அறிவுப்பு படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக 2021 ஜனவரி மாதம் வெளியானது. டான் படத்தின் படப்பிடிப்பு 2021 பிப்ரவரி முதல் டிசம்பர் வரை கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, சென்னை என பல்வேறு இடங்களில் நடந்துள்ளது. இப்படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

    இப்படத்தின் மூலம் சிவாகார்த்திகேயன் - பிரியங்கா மோகன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இவர்களது நடிப்பில் இப்படத்திற்கு முன்பு வெளியான 'டாக்டர்' திரைப்படம் தமிழ் சினிமாவில் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது.

    டான் படத்தினை நடிகர் சிவகார்த்திகேயன் ஃபர்ஸ்ட் காபி அடிப்படையில் தனது SK Production மூலம் தயாரித்துள்ளார். பின் இப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் 25 கோடிகள் சம்பளமாக பெற்றுள்ளார்.

    லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தினை நடிகரும் அரசியல்வாதியுமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவரது 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' நிறுவனம் மூலம் இப்படத்தினை தமிழகத்தில் விநியோகம் செய்துள்ளார்.

    டான் படத்தின் பாடல்களான ஜலபுலஜங்கு, பே, பிரைவேட் பார்ட்டி பாடல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று பிரபலமாகியுள்ளது.
    **Note:Hey! Would you like to share the story of the movie டான் with us? Please send it to us ([email protected]).