என் ஆளோட செருப்பை காணோம் இயக்குனர் ஜெகன்நாத் இயக்கத்தில், அறிமுக நடிகர் தமிழ், 'கயல்' ஆனந்தி, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, பாலசரவணன், லிவிங்ஸ்டன், ரேகா, சிங்கம்புலி, ஜெயப்பிரகாஷ், தளபதி தினேஷ் மற்றும் பலர் நடிக்கும் நகைச்சுவை காதல் திரைப்படம்.
கதை :
ஒரு அடைமழையில் தொலைந்த நாயகியின் செருப்புகளை தேடி நாயகன் குடையுடன் தன் பயணத்தை ஆரம்பிக்கிறார். 30 நாட்கள் நடக்கும் இந்த தேடல் பயணத்தில் அவர் சந்திக்கும் வித விதமான மனிதர்கள் மற்றும் அவர்கள் வாழ்வில் அந்த செருப்புகளால் ஏற்படும் நிகழ்வுகளின் தொகுப்பே இந்த படம்.
தொலைந்த ஜோடி செருப்புகள் நாயகியை சென்றடைந்ததா? நாயகனையும், நாயகியையும் அவை ஒன்று சேர்த்ததா? என்பதை நகைச்சுவையுடனும், சுவாரசியத்துடனும் சொல்வதே ‘என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் கதை.