எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே இயக்குனர் முருகலிங்கம் இயக்கத்தில் ஜெகன், சாம்ஸ், மனிஷாஜித் நடித்துள்ள நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ராஜாமணி தியாகராஜன் தயாரித்துள்ளார்.
கதை
காரைக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டிருப்பவர் ஜெகன். இவர் அதே ஊரில் டீக்கடை நடத்தி வரும் மாமன் மகள் மனிஷாஜித்தை காதலிக்கிறார். ஆனால் போலீசாகி, டி.ஜி-யிடம் கைக்குலுக்கினால் தான் தனது மகளை திருமணம் செய்து கொள்ள முடியும் என சொல்லிவிட்டு இறக்கிறார் நாயகியின் தந்தை.
தனது அப்பாவின் ஆசையை நிறைவேற்றினால் தான் கல்யாணம் என உறுதி கொள்கிறார் மனிஷா. இதனால் மாமனின் ஆசைப்படி போலீசாகும் ஜெகன் வீரதீர செயல்புரிந்து டி.ஜி-யிடம் கைக்குலுக்கி, ஊடகங்களில் செய்தியாகிறாரா? என்பதே மீதிப்படம். இதற்கிடையே, மற்றொரு காதலும் படத்தில் வருகிறது. அது என்ன ஆகிறது என்பதும் தனி டிராக்.