X
தமிழ் » திரைப்படங்கள் » எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே

Comedy | Drama | 05 Jul 2019 | U |
Tamil

2.5 /5 Users

1.5 /5 Filmibeat

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே கதை

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே இயக்குனர் முருகலிங்கம் இயக்கத்தில் ஜெகன், சாம்ஸ், மனிஷாஜித் நடித்துள்ள நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ராஜாமணி தியாகராஜன் தயாரித்துள்ளார். கதை காரைக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டிருப்பவர் ஜெகன். இவர் அதே ஊரில் டீக்கடை நடத்தி வரும் மாமன் மகள் மனிஷாஜித்தை காதலிக்கிறார். ஆனால் போலீசாகி, டி.ஜி-யிடம் கைக்குலுக்கினால் தான் தனது மகளை திருமணம் செய்து கொள்ள முடியும் என சொல்லிவிட்டு இறக்கிறார் நாயகியின் தந்தை.  தனது அப்பாவின் ஆசையை நிறைவேற்றினால் தான் கல்யாணம் என உறுதி கொள்கிறார் மனிஷா. இதனால் மாமனின் ஆசைப்படி போலீசாகும் ஜெகன் வீரதீர செயல்புரிந்து டி.ஜி-யிடம் கைக்குலுக்கி, ஊடகங்களில் செய்தியாகிறாரா? என்பதே மீதிப்படம். இதற்கிடையே, மற்றொரு காதலும் படத்தில் வருகிறது. அது என்ன ஆகிறது என்பதும் தனி டிராக்.
Read More

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே நடிகர்கள் & படக்குழுவினர்

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே அணியின் தகவல்

இயக்குனர் முருகலிங்கம்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
ஒரு சில படங்களில் ஏற்கனவே ஹீரோயினாக நடித்திருக்கும் மனிஷாஜித் தான் இதிலும் நாயகி. ஜெகனை ஏங்கவிட்டு, சூடேற்றி கிரங்க வைக்கிறார். இவரை தவிர டிசோஷா என்பவர் இரண்டாவது நாயகியாக படத்தில் வருகிறார். தைரியசாலி பெண்ணாக வந்து கவர்கிறார். நிறைய வசனம் பேசி, வில்லனிடம் அடிவாங்கி, அப்பாவி பத்திரிகையாளராக நடித்துள்ளார் 'குட்டி' விவேக். வில்லன் வேடம் ஏற்றிருக்கும் கவிஞர் பிறைசூடனின் உடல்மொழி அந்த ரோலுக்கு சுத்தமாக செட்டாகவில்லை. காமெடி என்ற பெயரில் சாம்ஸ் செய்யும் அலப்பறைகள், சிரிப்புக்கு பதில் கடுப்பை தான் ஏற்றுகிறது. ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி குஷிப்படுத்துகிறார் நடிகை அஷ்மிதா. நிகழ்கால அரசியல் வசனங்கள் இடம்பெற்றிருந்தாலும், 1980- களில் எடுக்கப்பட்ட படம் போன்ற உணர்வையே அளிக்கிறது படத்தின் மேக்கிங். ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத காட்சிகளும், பலவீனமான திரைக்கதையும் படத்தின் மைனஸ். சிவாவின் ஒளிப்பதிவு இன்னும் தரமாக இருந்திருக்கலாம்.

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+