twitter
    Tamil»Movies»Enemy»Story

    எனிமி கதை

    எனிமி இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, பிரகாஷ் ராஜ் என தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் வினோத் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் தமன் மற்றும் சாம் சி.எஸ் இணைந்து இசையமைத்துள்ளனர்.

    ஒரு அதிரடி - திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரேமண்ட் டெரிக் கிரஸ்டா எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் 2021 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.




    எனிமி திரைப்படத்தின் கதை

    கதைக்கரு: தனது தந்தை தம்பி ராமையாவுடன் தூத்துக்குடியில் இருந்து ஊட்டிற்கு இடம் பெயர்ந்து செல்லும் விஷால், அங்கு பிரகாஷ் ராஜ் மற்றும் அவரின் மகன் ஆர்யாவின் அறிமுகம் கிடைக்கிறது. ஆர்யாவும் - விஷாலும் உயிர் நண்பர்களாக வாழ்கின்றனர். பின் விஷால் மலேசியாவுக்கு சென்று ஒரு சூப்பர் மார்க்கெட் ஒன்றை தொடங்குகிறார். பின் அங்கு ஆர்யா செய்யும் தீய செயல்களை பற்றி அறியும் விஷால் ஆர்யாவை எதிர்த்து போராடுவதே இப்படத்தினை கதை.

    கதை

    சிறு வயதிலிருந்தே மிகவும் துருதுரு குழந்தையாக இருக்கிறார், விஷால். விஷால் மற்றும் அவரின் தந்தை தம்பி ராமையா தூத்துக்குடியில் இருந்து ஊட்டிற்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர். அங்கு முன்னாள் சி.பி.ஐ அதிகாரி பிரகாஷ் ராஜ் தனது மகன் ஆர்யாவுடன் வாழ்கிறார்.

    ஆர்யாவின் இல்லமும் விஷால் இல்லமும் அருகருகில் உள்ளது. ஆர்யாவின் குடும்பத்தோடு அறிமுகமாகும் விஷால் அவர்களோடு நெருக்கமாகிறார். பிரகாஷ் ராஜ் இந்த இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி பயிற்சி அளிக்கிறார். இருவரையும் ஒரு பெரிய காவலர்களாக மாற்ற வேண்டும் என பிரகாஷ் ராஜ் ஆசைப்படுகிறார்.

    இவர்களுக்கு கடினமாக பயிற்சி அளிக்கும் பிரகாஷ் ராஜ், ஒரு சமயத்தில் சிலரால் கொலை செய்யப்படுகிறார். பின் ஆர்யா அங்கிருந்து வேற இடத்திற்கு செல்கிறார். சில ஆண்டுகள் கழித்து விஷால் சிங்கப்பூரில் ஒரு சூப்பர் மார்க்கெட் வைத்துள்ளார். அவர் ஹேக்கிங் மற்றும் கணினி தொழில்நுட்ப பிரிவுகளில் கில்லாடி. விஷால் தங்கியுள்ள இடத்தில் உள்ள அங்கு வாழும் தமிழர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

    சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் சிலரால் பாதிக்கப்படுகிறார்கள். பின் சிங்கப்பூர் அமைச்சரை கொல்ல முயற்சிக்கப்படுகிறது. அதனை விஷால் தடுக்கிறார். பின் ஆர்யா ஒரு இன்டர்நேஷனல் குற்றவாளியாக படத்தில் வருகிறார். ஆர்யா தான் இந்த பிரச்சனைகளுக்கு காரணம் என அறியும் விஷால் ஆர்யாவை போலீஸ் இடம் சரணடைய வேண்டும் என வற்புறுத்துகிறார். இதனை ஆர்யா மறுக்க இவர்களுக்கிடையே யுத்தம் தொடங்குகிறது.

    ஆர்யா ஏன் இப்படி ஆனார்? பிரகாஷ் ராஜை கொன்றது யார்? ஆர்யாவின் பின்னணி கதை என்ன? இறுதியில் ஆர்யா - விஷால் என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் கதை.

    எனிமி திரைப்படத்தின் தகவல்கள்

    எனிமி திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் அரிமா நம்பி, இருமுகன் போன்ற சூப்பர் ஹிட் திரில்லர் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர். இவர் இயக்கிய திரைப்படங்கள் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பினை பெற்று பிரபலமாகியுள்ளது.

    எனிமி திரைப்படம் 2020 நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கி 2021 ஜூலை 12ல் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஷால் மற்றும் ஆர்யா இதற்கு முன்பு அவன் இவன் படத்திலும் இணைந்து நடித்துள்ளனர். 
    **Note:Hey! Would you like to share the story of the movie எனிமி with us? Please send it to us ([email protected]).