இங்கிலீஷ் விங்கிலிஷ் (U)

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

05 Oct 2012
கதை
இங்கிலீஷ் விங்கிலிஷ் இந்திய நாடகத் திரைப்படமாகும், இதை அறிமுக இயக்குனர் கவுரி ஷிண்டே இயக்க ஆர் பால்கி தயாரித்தார். இப்படம் தமிழிலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டு 2012 அக்டோபர் 5 அன்று வெளியிடப்பட்டது. இப்படத்தின் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பதிப்பு அதே நாளில் வெளியிடப்பட்டது. 14 ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்ரீதேவி இப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் பிரஞ்சு நடிகர் மெஹ்தி நெப்பேவு, அதில் உசைன், பிரியா ஆனந்த் போன்றோரும் நடிக்கின்றனர். அமிதாப் பச்சன் இந்திப் பதிப்பில் விருந்தினர் வேடத்தில் தோன்றுகையில் அஜித் குமார் தமிழ்ப் பதிப்பில் அதே பாத்திரத்தில் தோன்றுகிறார். இப்படம் 26 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு ஸ்ரீதேவியின் மீள்வருகையை குறிக்கிறது.

கதை:

இரு பிள்ளைகளின் தாயான சசி (ஸ்ரீதேவி) ஆங்கிலம் தெரியாததால் தனது பிள்ளைகளினதும் கணவரினதும் கிண்டலிற்கு உள்ளாகிறாள். எதிர்பாராத விதமாக சசியின் அக்காவின் மகளின் திருமணத்திற்காக சசியும் அவரது குடும்பத்தினரும் அமெரிக்காவுக்கு அழைக்கப்படுகின்றனர். குழந்தைகளின் பள்ளிப்படிப்பினாலும் கணவரின் வேலையாலும் சசி மாத்திரம் முதலில் அமெரிக்கா செல்கிறாள். அங்கு ஓர் ஆங்கிலப்பயிற்சி வகுப்பில் சேர்கிறாள், பின்னா் எவ்வாறு ஆங்கிலம் கற்றுக்கொள்கிறாள், இடையில் சந்திக்கும் சிக்கல்களை மையமாகக் கொண்டு படத்தின் கதை நகர்கிறது.
Buy Movie Tickets