X
தமிழ் » திரைப்படங்கள் » ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா

Action | Drama | 02 Aug 2019 | A | 136 Mins
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா கதை

ஹாப்ஸ் & ஷா ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் டேவிட் லெய்ட்ச் இயக்கத்தில் டுவெயின் ஜான்சன், ஜேசன் ஸ்டேதம் நடிக்கும் அதிரடி மற்றும் அறிவியல் புனைவு திரைப்படம். படக்குழு & படத்தின் தகவல்கள் இத்திரைப்படத்தினை தயாரிப்பாளராக இப்படத்தின் நாயகன் டுவெயின் ஜான்சன் மற்றும் ஜேசன் ஸ்டேதம் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் டைலர் பேட்ஸ் இசையமைத்துள்ளார். அதிரடி படமாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜொனாதன் சேல ஒளிப்பதிவு செய்துள்ளார். செவென் பக்ஸ் புரோடக்சன் மூலம் இப்படத்தினை தயாரித்த இப்படத்தின் நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் இத்திரைப்படத்தினை யூனிவேர்சல் பிக்சார்ஸ் நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை விநியோகம் செய்துள்ளனர். அமெரிக்கா நாட்டின் படி $200 மில்லியன் தொகையில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் 2019-ஆம் ஆண்டு ஜூலை 13-ல் திரைக்கு வருகிறது.  ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ஹாலிவுட் திரைப்படங்களில் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் சீரிஸ் எனப்படுவது பிரபலமான திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படத்தில் உள்ள இரண்டு முக்கிய கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் சீரியஷில் உள்ள இத்திரைப்படத்திற்கு கிறிஸ் மோர்கன் மற்றும் ட்ரூ பியர்ஸ் என்பவர்கள் திரைக்கதை எழுதியுள்ளார்கள். கதை ஒரு தனியார் நிறுவனத்தின் ரகசியங்களை காப்பாற்றவும், அந்நிறுவனத்தின் எதிரிகளை கொலை செய்வதற்காகவும் சூப்பர் மேன் என்ற திட்டத்தின் கீழ் ஒரு மனிதனின் மரபு அணுக்களின் ஒரு சில மாற்றங்கள் செய்து அவனை சக்திசாலியாக மாற்றுகின்றனர். மரபு அணு மாற்றத்தால் சக்திசாலியாக மாறியவருக்கு கொடுக்கப்படும் முதல் பணியே ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படத்தில் ஒரு முக்கிய வில்லனாக இருந்து நாயகனாக மாறிய ஷா என்பவரின் தங்கையை கொள்வதுதான். இந்த செய்தியை அறிந்த அமெரிக்கா அரசாங்கம் அவனை தடுத்து நிறுத்துவதற்காக ஹாப்ஸ் & ஷா இருவரையும் தேர்ந்தெடுக்கிறது. எலியும் பூனையுமாக இருக்கும் இவர்கள் ஒன்றாக செயல்பட விருப்பம் இல்லாமல் வேறு வழியின்றி ஒன்றாக செயல்பட தொடங்குகின்றனர். ஒரு கட்டத்தில் வில்லனை திசை திருப்ப இவர்கள் ஹாப்ஸ்-ன் இருப்பிடமான ஆப்பிரிக்கா-விற்கு செல்கின்றனர். இறுதியில் இவர்கள் சூப்பர் சக்தியாக மாறிய வில்லனை எவ்வாறு அளிக்கின்றனர் என்பதே சுவாரஸ்யமான திரைக்கதை.
Read More

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா நடிகர்கள் & படக்குழுவினர்

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா அணியின் தகவல்

இயக்குனர் டேவிட் லெய்ட்ச்
கதை கிறிஸ் மோர்கன்
ஒளிப்பதிவாளர் ஜொனாதன் சேல
தொகுப்பாளர் NA
இசை டைலர் பேட்ஸ்
தயாரிப்பாளர் டுவைன் ஜான்சன், ஜேசன் ஸ்டேதம், கிறிஸ் மோர்கன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+