X
பிரெண்ட்ஸ்
Comedy | Drama | 14 Jan 2001 | U | 167 Mins
Tamil

பிரெண்ட்ஸ் கதை

பிரெண்ட்ஸ் 2001-ம்  ஆண்டு இயக்குனர் சித்திக் இயக்கத்தில், விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, தேவயாணி, வடிவேலு மற்றும் பல நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்துள்ள நகைச்சுவை மற்றும் குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக கே.வி.ஆனந்த் பணியாற்றியுள்ளார்.

இத்திரைப்படமானது 2001-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ல் வெளியானது.

கதை

விஜய் (அரவிந்தன்), சூர்யா (சந்துரு), ரமேஷ் கன்னா (க்ரிஷ்ணமுர்த்தி) ஆகியோர் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். இவர்களில் விஜய்க்கு தேவயானி உடன் நடக்கும் திருமணத்தால் நண்பர்களுள் கருத்துவேறுபாடு ஏற்படுகிறது. பின்னர் இவர்கள் எவ்வாறு இணைகின்றனர் என்பதே படத்தின் கதை.

இப்படத்தில் ரமேஷ் கன்னா (க்ரிஷ்ணமுர்த்தி)-யின் சித்தப்பா கதாபாத்திரமாக வடிவேலு வருகிறார். வடிவேலுவிடம் ஃப்ரசென்ட்டிஸ் ஆகா பணிபுரிகின்றனர் விஜய் மற்றும் சூர்யா. காண்ட்ராக்டர் நேசமணி என்னும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் வடிவேலு, இக்கதாபாத்திரத்தின் நகைச்சுவை வாயிலாக வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரம் இன்றும் பிரபலமாகியுள்ளது.

பிரபலம் 

18 ஆண்டுகளுக்கு பின்னர் 2019 மே 29-ல் வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரமானது இணையத்தளத்தில் (#pray_for_nesamani) என்ற வாக்கியத்தின் மூலம் பிரபலமாகி, பல தரப்பு மக்களின் கவனத்தை ஈற்றுள்ளது. மேலும் இக்கதாபாத்திரம் மூலம் இவர் பேசிய வசனங்கள் மற்றும் நகைச்சுவை லூட்டிகள் இன்றும் ரசிக்கத்தக்கதாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+